விஜய் டிவியில் 10வது ஆண்டாக பிக்பாஸ் தமிழ் சீசன் நடந்து வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 6ம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் சீசன் 10 தற்போது 2 வாரங்களை கடந்துள்ளது. வழக்கம் போல இந்த முறையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் சண்டை சச்சரவு பிரச்னைகளுடன் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, லீடர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்று வேலை என்று பேசியிருந்தார்.
உடனே இதற்கு தவெக கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் சேதுபதி எங்கள் அண்ணன் விஜயை தான் அப்படி தவறாக பேசியிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவரது படம் ஓட விடமாட்டோம் என்றெல்லாம் கண்டனம் தெரிவித்து ஆத்திரப்பட்டனர். ஆனால் விஜய் டிவி நிர்வாகம், இந்த கருத்து யாரையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டவை அல்ல என்று தன்னிலை விளக்கம் அளித்தது.
அதே நேரத்தில் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்காக பேசிய கருத்தை விஜயை பேசியதுதான் என்று தவெகவினர் தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்வது காமெடியாக உள்ளது என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இங்கு பேசப்படும் கருத்துக்கள் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தம். வெளியில் இருக்கும் நபரை அமைப்பை குறிப்பிடவில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.
கடந்த வாரமே இதை சொல்லி இருக்க வேண்டும். இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது என்றும் நடிகர் விஜய் சேதுபதி அதில் பேசியிருக்கிறார். எனினும் நேற்று நிகழ்ச்சிக்கு இடையே பேசிய விஜய் சேதுபதி, விமர்சனம் வருதுன்னா அதை ரிசீவ் பண்ணுங்க, அதுதான் மெச்சூரிட்டி. விமர்சனத்தை கண்டு பயப்படாதீங்க என்றும் குட்டு வைத்திருக்கிறார்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசப்படும் கருத்துகள் தவெக குறித்தோ விஜய் குறித்தோ பேசப்படுபவை அல்ல என்ற தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு இனி வாரந்தோறும் ஊமைக்குத்தாக குத்துவார் என்று தெரிய வருகிறது. இதுதான் தரமான சம்பவம், விஜய் சேதுபதி போடற கணக்கு வேற லெவலா இருக்கும் போல என்று அவரை தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர்.





