- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் மே 2ம் தேதி வேலை நிறுத்தம் - தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர்...

வரும் மே 2ம் தேதி வேலை நிறுத்தம் – தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்ப்பு!

- Advertisement -

சென்னையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், சிறிய முதலீட்டு படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மானியத் தொகையை தமிழக அரசு வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற மே 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாக முன்னிறுத்தி மே 2ம் தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றியது எங்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது.

- Advertisement -

தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சமூக தீர்வு காண உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை நீங்கள் வெளியிட்டது வருத்தத்திற்குரியது. திரைத்துறை சார்ந்த நடிகர்கள் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது.

மேலும் தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்மாறாக நாங்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த விதமான கடிதமும் மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை. அது குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தை நடத்தவும் எங்களை அழைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்கள் வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த எங்கள் சட்ட விதிகளில் இடமில்லை.

- Advertisement -

இதனிடையே தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின்படி தென்னிந்திய நடிகர் சங்கமும் அதன் உறுப்பினர்கள் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது. அது தவறானவை எனில் உடனே அதை மறுத்து தங்கள் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடுமாறும் அந்த தகவல்கள் தங்கள் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டு இருந்தால் உடனடியாக உண்மைக்கு புறம்பான அறிக்கையை திரும்பப் பெறவும் வேண்டும்.

தமிழ் திரைத்துறையினர் அனைவரின் நல்ல நிகழ்காலத்திற்காகவும் வளமான வருங்காலத்திற்காகவும் எங்கள் ஒத்துழைப்பை நல்க என்றென்றும் ஆயத்தமாக உள்ளோம். அதையே துறை சார்ந்த பிறரிடமும் எதிர்பார்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக திரைப்பட படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்