- Advertisement -
Homeபொழுதுபோக்குஒருவழியா விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு... போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்த...

ஒருவழியா விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு… போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்த படக்குழு… இருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கே…

- Advertisement -

சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும், எந்த படம் எடுத்தாலும் அதில் ஒரு எதிர்பார்ப்பையும் எப்போதும் வைத்திருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். தனுசை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு தரமான திரைப்படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.

 

- Advertisement -

இது போக வெற்றிமாறன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்த விசாரணை திரைப்படம் காண்போர் நெஞ்சை உலுக்கியது. இப்படி எந்த திரைப்படத்திலும், ஒரு சிறிய குறை கூட இல்லாமல் நேர்த்தியாக படத்தை எடுத்து முடித்து விடுவார் வெற்றிமாறன்.

 

- Advertisement -

சமீப காலமாக அவர் நாவலை தழுவி படத்தை எடுப்பதில் விருப்பம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு அவர் அசுரன் திரைப்படத்தை இயக்கினார். இதேபோல், சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் சிறுகதையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்க முன்வந்தார்.

 

இதற்கும் வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட, கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக இருந்தது. சூர்யா இதில் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அமீர் சூரி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றனர். இதற்காக கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு, பணிகள் நடைபெற்றன.

 

இருப்பினும் சூர்யாவுக்கு அடுத்தடுத்த கமிட்மெண்டுகள் இருந்ததால் ஒரு சிறிய இடைவேளை தேவைப்பட்டது. இந்த நேரத்தில் தான், விடுதலைப் படத்தை எடுக்கச் சென்றார் வெற்றிமாறன். இதுவும், துணைவன் என்னும் நாவலை தழுவி உருவானது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தின் மீதான பட்ஜெட்டை அதிகரித்த வெற்றிமாறன், விடுதலைப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்தார்.

 

இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, சூரிக்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. இதன்பிறகு இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஓராண்டு வரை நடைபெற்றது. புதிதாக, மஞ்சு வாரியர் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரும் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கான பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்க, படம் இந்த ஆண்டு வெளிவருமா இல்லையா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இப்படியான சூழலில் தான், விடுதலை திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்து இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்