- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, இந்த கேரக்டர்களில் எல்லாம் நடிகர் பார்த்திபன் நடிக்க இருந்தாரா? நல்லவேளை… அது நடக்காமல் அந்த...

என்னது, இந்த கேரக்டர்களில் எல்லாம் நடிகர் பார்த்திபன் நடிக்க இருந்தாரா? நல்லவேளை… அது நடக்காமல் அந்த படங்கள் தப்பிச்சுது – கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜிடம் தொழில் கற்றவர் இயக்குனர் பார்த்திபன். புதிய பாதை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற சில ஹீரோக்களை சந்தித்து கதை சொன்னார். அவர்கள் யாருமே சம்மதிக்க முன்வராததால் கடைசியில் பார்த்திபனே ஹீரோவாக நடித்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து இயக்குனராக நடிகராக பார்த்திபன் நிறைய படங்களில் தனது பங்களிப்பை செய்தார். இதில் சில படங்கள் ஜெயித்திருக்கின்றன. பல படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. இதில் தயாரிப்பாளராகவும் பார்த்திபன் பலத்த நஷ்டங்களை அவ்வப்போது சந்தித்திருக்கிறார்.

- Advertisement -

எதையுமே வித்யாசமாக சிந்தித்து செய்யும் இயக்குனர் பார்த்திபனுக்கு மற்ற இயக்குனர்களின் படங்களும் நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கின்றன. குறிப்பாக சேரன் இயக்கத்தில் உருவான பாரதி கண்ணம்மா வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களும் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் சுபாஷ் இயக்கிய சபாஷ் போன்ற படங்களும் நல்ல வெற்றிப் படங்களாக இருந்தன.

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு இரவின் நிழல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஹவுஸ்புஃல் போன்ற படங்கள் மிகச்சிறந்த படங்களாக இருந்தன. ஆனால் பெரும்பாலான பார்த்திபன் படங்கள் மொக்கை படங்களாக இருந்தன. அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் அந்த கெட்டப்பில் பார்த்திபன் கொஞ்சமும் பொருந்தவில்லை என்று படம் பார்த்த பலரும் வெளிப்படையாக விமர்சித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன் கூறுகையில், பல படங்களில் எனக்கு தேடி வந்த வாய்ப்பை நான் நிராகரித்திருக்கிறேன். குறிப்பாக நாட்டாமை படத்தில் விஜயகுமார் நடித்த நாட்டாமை கேரக்டரில் நடிக்க டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் என்னை தான் முதலில் கேட்டார். அதே போல் காசி படத்தில் விக்ரம் கேரக்டரில் நடிக்க இருந்ததும் நான்தான்.

அதே போல் அஜீத்குமார் நடித்த சிட்டிசன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க என்னிடம்தான் கேட்டார்கள். நான் அஜீத்குமாரை அந்த படத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்தேன் என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார். நல்ல வேளை, இந்த படங்களில் அந்த கேரக்டரில் பார்த்திபன் நடிக்காமல் விட்டு, அந்த படங்களை எப்படியோ காப்பாற்றி விட்டார். இதில் ஒரு கேரக்டர் கூட அவருக்கு பொருந்தாது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்