- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் ஷங்கர் இயக்கிய படங்களில் நடிக்க மறுத்தாரா நடிகை சமந்தா? அதுவும் இந்த படங்களிலா… -...

மணிரத்னம் ஷங்கர் இயக்கிய படங்களில் நடிக்க மறுத்தாரா நடிகை சமந்தா? அதுவும் இந்த படங்களிலா… – குழம்பிப் போன தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

இந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கில் முதலில் பிரபலமான அவர் பிறகு தமிழில் பல படங்களில் நடித்தார். இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். எந்த மொழி படமாக இருந்தாலும் தனது வசீகரமான அழகால் அழுத்தமான நடிப்பால் ரசிகர்களை எளிதில் தன் வசப்படுத்தி விடுகிறார் நடிகை சமந்தா.

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டில் சமந்தா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 2021ம் ஆண்டிலேயே அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா 2வது திருமணம் செய்திருக்கிறார்.

ஆனால் நடிகை சமந்தா, தனது வாழ்வில் 2வது திருமணம் இல்லை என்ற முடிவுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். எனினும் அவ்வப்போது சில நடிகர்கள் இயக்குனர்களுடன் அவர் கிசுகிசுக்கப்படுகிறார் என்றாலும், அவர் இன்னும் முரட்டு சிங்கிளாக தான் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சமந்தா நடித்த சிட்டாடல் என்ற இந்தி வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நடிகை சமந்தா தமிழில் தெறி கத்தி சீமராஜா தங்கமகன் 10 எண்றதுக்குள்ள அஞ்சான் 24 காத்துவாக்குல ரெண்டு காதல் இரும்புத்திரை நீதானே என் பொன் வசந்தம் பாணா காத்தாடி விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில் சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் அவர் நடிக்காத தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான படம் கடல். இந்த படத்தில் நாயகியாக துளசி நாயர் நடித்திருந்தார். முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தாவை அணுகிய நிலையில் அவர் மறுத்திருக்கிறார். அதே போல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடித்த ஐ படத்தில், நாயகியாக நடிக்க முதலில் ஷங்கர் அழைத்தது சமந்தாவைதான். அந்த படத்திலும் அவர் நடிக்க மறுத்திருக்கிறார்.

அதேபோல் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன், புஷ்பா படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவை அணுகிய நிலையில் அவர் மறுத்ததால்தான் பிறகு ராஷ்மிகா மந்தனா அந்த படத்தில் நாயகியாக நடித்தார். ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாட்டுக்கு மட்டும் சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். அதே போல் நானி நடித்த தசரா, என்டிஆரின் பயோபிக் படமான என்டிஆர் கதைநாயகுடு, ராம்சரண் நடித்த புரூஸ் லி தி பைட்டர் மற்றும் யுவடு ஆகிய படங்களிலும் சமந்தா நடிக்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்