- Advertisement -
Homeபொழுதுபோக்குவளர்ப்பு தந்தை ரங்கராய சக்திவேல் நாயக்கரை போட்டுத் தள்ளும் வில்லன் கேரக்டரில் நடிகர் சிம்பு -...

வளர்ப்பு தந்தை ரங்கராய சக்திவேல் நாயக்கரை போட்டுத் தள்ளும் வில்லன் கேரக்டரில் நடிகர் சிம்பு – தக்லைஃப் படத்தின் முழுக் கதை இதுதாங்க!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு இணைந்து நடித்த தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்தின் 2ம் பாகம் அல்ல தக்லைஃப் என நடிகர் கமல்ஹாசன் உறுதியாக கூறிய நிலையில், இந்த படத்தின் முழு கதையும் இப்போது லீக் ஆகி விட்டது. இதுவும் ஒரு கேங்ஸ்டர் கதைதான். இதில் கமல் சிம்புவும் ஒரு கட்டத்தில் எதிரிகளாக மாறிவிடுவதே படத்தின் மையக்கரு.

குற்றங்கள் செய்வதை தனது வாழ்க்கையாக கொண்டவர் கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் (கமல்ஹாசன்) மாபியா உலகில் பெரிய தாதாவாக வலம் வருகிறார். கமலையும் அவரின் சகோதரர் மாணிக்கம் ( நாசர்) இருவரையும் போலீசார் என்கவுண்டர் செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது அமரன் என்கிற சிறுவன் அவர்களை காப்பாற்றுகிறான். தங்கள் உயிரை காப்பாற்றி அமரனை, ரங்கராய சக்திவேல் தனது மகனாக பாவித்து தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுவன்தான் பின்னாளில் சிம்புவாக இருக்கிறார்.

- Advertisement -

அமரன் வாலிபனாக வளர்ந்த போது ரங்கராய சக்திவேல் அண்டர்வேர்ல்ட் தாதாவாக மாறி இருக்கிறார். தனது மனைவி அமிராமியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தும் அவர் ஒரு பெண்ணுடன் ரகசிய உறவிலும் இருக்கிறார். அவர்தான் திரிஷா. ரங்கராய சக்திவேல் தனது கேங்ஸ்டர் கும்பலுக்கு ஒரு கட்டத்தில் தனது வளர்ப்பு மகன் சிம்புவை தலைவனாக்குகிறார். கேங்ஸ்டரின் எல்லா பொறுப்புகளும் அமரனிடம் வசம் வருகிறது.

இந்நேரத்தில் தனது வளர்ப்பு மகன் சிம்பு மீது வைத்துள்ள அதீத அன்பு மற்றும் நம்பிக்கையால் தனது மகளையும் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார் அண்டர்வேல்ட் தாதா ரங்கராய சக்திவேல் நாயக்கர். ஆனால் ரங்கராய சக்திவேலின் முழு அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்கிற பேராசை சிம்புவுக்கு வருகிறது.

- Advertisement -

ரங்கராய சக்திவேலின் தம்பி மாணிக்கத்துடன் சேர்ந்துக் கொண்டு தனது வளர்ப்பு தந்தை, மாமனார் என்றும் பாராமல் கமலை கொலை செய்ய திட்டமிடுகிறார் சிம்பு. ரங்கராய சக்திவேலுவான கமலை கொலை செய்து விட்டதாக நாசரும் சிம்புவும் நம்பும் ஒரு சூழ்நிலையில் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து உயிர் தப்புகிறார். அந்த நேரத்தில் சிம்பு முழு அண்டர்வேர்ல்டையும் கைப்பற்றி விடுகிறார்.

தன்னை கொலை செய்ய முயற்சி செய்தது அமரனே என சந்தேகிக்கும் ரங்கராய சக்திவேல் அவரையும் தனக்கு துரோகம் செய்த தம்பி மாணிக்கத்தையும் பழிவாங்க வருகிறார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் தக்லைஃப் படத்தின் கதையாக உள்ளது. கதை சுவாரசியமாக இருப்பது போல் படத்தின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாமே நேர்த்தியாக இருந்தால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

சற்று முன்