- Advertisement -
Homeபொழுதுபோக்குயார்கூட தான் உங்களுக்கு பஞ்சாயத்து? எம்எல்ஏ சிஎம் பதவி ஏதாச்சும் கொடுத்தா அதை நிறுத்துவீங்களா? -...

யார்கூட தான் உங்களுக்கு பஞ்சாயத்து? எம்எல்ஏ சிஎம் பதவி ஏதாச்சும் கொடுத்தா அதை நிறுத்துவீங்களா? – நடிகர் சிவகார்த்திகேயனை விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த 14 ஆண்டுகளில் அவர் ஒரு முன்னணி நடிகராக உச்சம் தொட்டிருக்கிறார். அவரது தீவிரமான முயற்சியும் உழைப்பும் பங்களிப்பும் ஆர்வமும்தான் அவரது வெற்றிக்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார். எஸ்கே புரடக்சன்ஸ் என்ற பெயரில் அவரே சொந்தமாக பல படங்களை தயாரித்தும் வருகிறார். ஆரம்பத்தில் இப்படி படங்கள் தயாரிப்பில் பலத்த நஷ்டங்களை சந்தித்த போதிலும் நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பும் அவரிடம் காணப்படுகிறது.

- Advertisement -

இப்போது ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனம் எஸ்கே புரடக்சன்ஸ் மூலம் தயாரித்து இருக்கிறார். இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் பார்த்த செலிபிரட்டிகள் பாராட்டிய வகையில் இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன், எனக்கு தொடர்ந்து தடை போட்டுட்டே இருக்காங்க. எனக்கு இடையூறு செய்றாங்க. அந்த தடையை மீறி தான் வந்துட்டு இருக்கேன். தயவு செய்து என்னை விட்டுடுங்க என்று பேசியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார். அந்த பதிவில் மாறன் கூறியிருப்பதாவது, இதுவரைக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கியது உங்களுக்கு போதாதா? யாராவது இவருக்கு எம்எல்ஏ சீட்டோ இல்லேன்னா சிஎம் பதவியோ கொடுத்தாலாவது இந்த மாதிரி புலம்பறதை நிறுத்துவாரா?

இவருக்கு யாருதான் தடை போடுகிறாங்க. யார் என்று கேட்டால் அதையும் சொல்ல மாட்டாராம். தனுஷா இமானா இல்லே அருண் விஜய்யா? யார் கூட இருக்கிற பஞ்சாயத்து இன்னும் உங்களுக்கு முடியலே? என்று ப்ளு சட்டை மாறன், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து கடுமையாக விமர்சித்து அந்த பதிவில் பேசியிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்