- Advertisement -
Homeபொழுதுபோக்குஉண்மையை சொன்னது தப்பா போச்சே? சீரியல் நடிகர் பூவிலங்கு மோகனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் -...

உண்மையை சொன்னது தப்பா போச்சே? சீரியல் நடிகர் பூவிலங்கு மோகனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் – ஆனால் சூப்பர் ஸ்டாரே இப்படி செய்யலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் பூ விலங்கு மோகன். பொய்க்கால் குதிரை, தண்ணீர் தண்ணீர், பூ விலங்கு, பகல் நிலவு, புன்னகை மன்னன், அமர்க்களம், மலைக்கோட்டை, வானமே எல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் சில காட்சிகளில் வரும் குணச்சித்திர நடிகராக தான் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

சினிமாவில் நடித்து வந்த பூ விலங்கு மோகன் ஒரு கட்டத்துக்கு பிறகு டிவி சீரியல்களிலும் நிறைய நடித்தார். விடாது கருப்பு, ஜன்னல், நாதஸ்வரம், சித்தி, வள்ளி, மகாபாரதம், அண்ணாமலை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பார்வையாளர்களின் மத்தியில் நல்ல கவனம் பெற்றார்.

- Advertisement -

குறிப்பாக மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில், மெளலியின் தம்பியாக மயிலு என்ற கேரக்டரில் பூவிலங்கு மோகனின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஒரு கட்டம் வரை அண்ணன் மௌலியின் அன்பான தம்பியாகவும், அதன் பிறகு அப்படியே அவருக்கு எதிரியாக மாறி, வில்லத்தனமாக நடிப்பில் பூ விலங்கு மோகன் மிரட்டினார்.

தமிழ் சினிமாவை பொருத்த வரை திறமையான நடிகர்களை ஒதுக்கி வைத்துவிட்டு சிபாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிலை எப்போதோ துவங்கி விட்டது. அதனால் குணச்சித்திர நடிப்பில் பெரிய அளவில் வரவேற்பை பெற வேண்டிய பூவிலங்கு மோகன் போன்ற சிறந்த நடிகர்கள் தங்களுக்கான வாய்ப்பை இழந்து திறமையை வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பூவிலங்கு மோகன் ஒரு விஷயத்தை பல ஆண்டுகளுக்கு பின் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தில், பூவிலங்கு மோகனும் நடித்திருந்தார். இந்த படத்தை தயாரித்தது ரஜினிதான். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை தான் இப்போது பூவிலங்கு மோகன் கூறியிருக்கிறார்.

இதுபற்றி நடிகர் பூவிலங்கு மோகன் கூறுகையில், நான் பாபா படத்தில் நடித்த போது, படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் என்னை அழைத்து, பக்கத்தில் அமர வைத்தார். சீரியலில் நடிக்கிறீங்க, அது எப்படி இருக்கும், எவ்வளவு சம்பளம் கொடுப்பாங்க என அக்கறையாக விசாரித்தார். நானும் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க என்றேன். அதன்பிறகு 2 மாதங்கள் கழித்து எனக்கு அதே 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அவர் கொடுத்திருந்தார், என்று வருத்தமுடன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்