விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி துவங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வருகிற ஞாயிறு 18ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இன்றுதான் இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 5 பேர் உள்ள நிலையில் இன்று சாண்ட்ரா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இறுதி போட்டியாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் சபரிநாதன் அரோரா மற்றும் திவ்யா கணேஷ் ஆகிய 4 பேர் மட்டுமே இறுதி வாரத்தில் இருக்க உள்ளனர். அவர்களில் யார் வெற்றியாளர் டைட்டில் வின்னராக யார் அறிவிக்கப்பட போகிறார் என்பதில் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால் நிச்சயமாக அரோராவுக்கு மட்டும் கொடுக்க கூடாது. இந்த சீசனில் 50 நாட்களுக்கு பிறகுதான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதே தெரிந்தது என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மற்ற 3 பேரில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் அவர் வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர் என்ற விமர்சனமும் உள்ளது.
இதற்கிடையே பிக்பாஸ் பார்வையாளர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளியது கானா வினோத்தின் திடீர் வெளியேற்றம்தான். ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்க கூடாது. கடைசி வரை அவர் தாக்கு பிடித்து இருந்தால் அவர்தான் டைட்டில் வின்னர். ரூ. 50 லட்சம் மொத்தமாக அவருக்கு கிடைத்திருக்கும் என்று பலரும் புலம்புகின்றனர்.
ஆனால் கானா வினோத்தை தூண்டிவிட்டு பணப்பெட்டியை எடுக்க வைத்ததே அரோரா தான். அவர் பேசியதை நம்பிதான் கானா வினோத் அந்த தவறான முடிவுக்கு வந்தார் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. ஆனால் இதை கானா வினோத் மறுத்திருக்கிறார். என் சுய நினைவுப்படி என் முடிவாக தான் பணப்பெட்டியை எடுத்தேன். இது எனக்குப் போதும் என்றும் அவர் விஜய் சேதுபதி முன்னிலையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கானா வினோத் எடுத்துச் சென்ற பணப்பெட்டியில் இருந்த தொகை மொத்தம் 18 லட்சம் ரூபாய். பிக்பாஸ் வீட்டுக்குள் 98 நாட்கள் இருந்த அவருக்கு சம்பளம் இதர சலுகைகள் போட்டி விதிமுறைகள் உள்ளிட்டவை அடிப்படையில் மொத்த சம்பளம் ரூ. 35 லட்சம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் பிக்பாஸ் மொத்த வருமானமாக கானா வினோத்துக்கு ரூ. 53 லட்சம் கிடைத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.





