- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரோரா பேச்சை கேட்டு மோசம் போன பிக்பாஸ் போட்டியாளர் - இப்படி மிஸ்டேக் பண்ணிட்டீங்களே ப்ரோ...

அரோரா பேச்சை கேட்டு மோசம் போன பிக்பாஸ் போட்டியாளர் – இப்படி மிஸ்டேக் பண்ணிட்டீங்களே ப்ரோ என்று புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் 9 சீசன் 90 நாட்களை கடந்து நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்போது கானா வினோத் சாண்ட்ரா திவ்யா கணேஷ் அரோரா சபரிநாதன் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகிய 6 பேர் மட்டுமே இறுதி போட்டியாளர்களாக உள்ளனர். இதில் கானா வினோத்துக்கு டைட்டில் வின்னர் வாய்ப்பு அதிகம் என்று பரவலாக கூறப்படுகிறது.

ஏனெனில் அவரது சில செயல்பாடுகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கம்ருதீன் விவகாரத்தில் அவர் ஒரு உண்மையான நண்பனாக நடந்துக்கொண்டதும் கார் டாஸ்க்கில் இருந்து சாண்ட்ராவுக்காக வெளியேறி வந்ததும் பலத்த பாராட்டை பெற்றது.

- Advertisement -

சமீபத்தில் பிக்பாஸ் மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதியும், உங்களுக்கான சிம்மாசனம் கண்டிப்பாக உங்களுக்குதான். அது வேறு யாருக்கும் கிடைக்காது என்றும் மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இந்த சூழலில் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ. 18 லட்சத்ம் பணப் பெட்டியுடன் கானா வினோத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏறக்குறைய 90 சதவீதம் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் கானா வினோத் தான் என முடிவு செய்யப்பட்ட நிலையில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தது பிக்பாஸ் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. இதற்கு காரணம் சக போட்டியாளர் அரோராதான் என்பது தெரிய வந்துள்ளது. அவர்தான் இதுகுறித்து கானா வினோத்திடம் பேசி அவரது புத்தியை மாற்றியிருக்கிறார்.

- Advertisement -

இந்த வாரம் பணப்பெட்டியுடன் வெளியேறினால் பெரிய லாபம். அடுத்த வாரம் வீட்டுக்குள் வந்துவிடலாம். அந்த வாரத்துக்கும் பணம் வந்துவிடும் என்று வேறு கோணத்தில் அரோரோ பேசியதை கேட்ட கானா வினோத், டைட்டில் வின்னர் ஆகி ரூ. 50 லட்சம் பரிசு பெறுவதை யோசிக்காமல் அவசர முடிவெடுத்து ரூ. 18 லட்சத்துடன் வெளியேறி உள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் கம்ருதீன் பார்வதி பேச்சை கேட்டு கேட்டு கடைசியில் ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்டார். இப்போது அரோரோ கூறியதை நம்பி கானா வினோத்தும் தனது வெற்றி வாய்ப்பை அவரே இழந்திருக்கிறார். இப்படி பொம்பளை பேச்சை கேட்டு அடுத்தடுத்து 2 போட்டியாளர்கள் தங்களுக்கான வெற்றியை இழந்து விட்டார்களே என்று பிக்பாஸ் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்