- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை திறக்கற நேரத்துல இப்படி ஒரு இடையூறா? கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படி...

இட்லி கடை திறக்கற நேரத்துல இப்படி ஒரு இடையூறா? கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படி குறுக்கே வந்துட்டாரே? – அப்செட் ஆன இயக்குனர் தனுஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். வுண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இதுவரை பல படங்களை நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார். பல படங்களில் சொந்தக் குரலிலும் நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். மேலும் ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை ஆகிய படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.

ராஜ்கிரண் ரேவதி நடித்த ப பாண்டி படத்தை நடிகர் தனுஷ் முதன்முறையாக டைரக்ட் செய்தார். இந்த படத்தில் இளம் வயது ராஜ்கிரண் கேரக்டரிலும் தனுஷ் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தனது 50வது படம் ராயன் படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்தார். கடந்தாண்டில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

அடுத்ததாக தனது அக்கா மகன் பவிஷ் என்ற புதுமுகத்தை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பிளாப் ஆனது.

அடுத்து கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால் இட்லி கடை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படத்தை இயக்குனர் தனுஷ் ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

- Advertisement -

இந்த சூழலில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா சேப்டர் 1 படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த படத்தை வெளியிட முடிவாகி உள்ளது. பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் காந்தாரா சேப்டர் 1 படம் ரிலீஸாவதால், இட்லி கடை படத்துக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் போதிய தியேட்டர் கிடைக்காது. மீண்டும் இப்படி ஒரு சிக்கல் வந்துவிட்டதே என நடிகர் தனுஷ் பயங்கர அப்செட்டில் இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்