- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா மூத்த நடிகர் விஜயகுமாரை பார்த்து இப்படி ஒரு கேள்வியா?, பிரபல நடிகர் ஆவேசம்...

தமிழ் சினிமா மூத்த நடிகர் விஜயகுமாரை பார்த்து இப்படி ஒரு கேள்வியா?, பிரபல நடிகர் ஆவேசம் – வனிதா விஜயகுமாரையே மிஞ்சி விட்டாரே?

- Advertisement -

நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்து வருகிறார். வயது 75களை கடந்தும் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜயகுமார் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் பெயர் சொல்லும் படியான கேரக்டர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயகுமார் நடித்த படங்களில் நாட்டாமை, நட்புக்காக, சேரன் பாண்டியன், பாரதி கண்ணம்மா, சுயம் வரம் போன்ற பல படங்களில் அவரது நடிப்பு தனித்து தெரியும். ஹீரோயின் அப்பா, நேர்மையான போலீஸ் அதிகாரி, ஊர் நாட்டாமை, ஜமீன்தாரர், டாக்டர், வக்கீல், முதலமைச்சர் போன்ற கேரக்டர்களில் விஜயகுமார் கனகச்சிதமாக பொருந்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

விஜயகுமார் பேத்தி தியா திருமணம் சமீபத்தில் நடந்தது. டாக்டர் தியாவின் திருமண விழாவில் நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். ஆனால் விஜயகுமாரின் சொந்த மகள் வனிதா விஜயகுமார் அந்த திருமணத்தில் கலந்துக்கொள்ளவில்லை. அவரை அழைக்கவே இல்லை என்ற நிலையில், விஜயகுமார் குடும்பப் பின்னணி நிலவரம் தெரிய வந்துள்ளது.

அதாவது நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு. அவருக்கு கவிதா, அனிதா என 2 மகள்கள், அருண் விஜய் என்ற மகன் என 3 பேர் உள்ளனர். விஜயகுமாரின் 2வது மனைவிதான் நடிகை மஞ்சுளா. அவருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் வனிதா விஜயகுமார் தவிர, அனிதாவின் மகள், விஜயகுமாரின் பேத்தி தியா திருமணத்தில் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என்று 2 மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு பிறந்த மகள்கள் கவிதா, அனிதா இருவரையும் டாக்டருக்கு படித்த வைத்திருக்கிறார் விஜயகுமார். அவர்கள் வெளிநாட்டில் டாக்டர்களாக உள்ளனர்.

ஆனால் 2வது மனைவி மஞ்சுளாவின் மகள்கள் யாரையுமே படிக்க வைக்கவில்லை. விஜயகுமார் நினைத்திருந்தால் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோரை டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என படிக்க வைத்திருக்க முடியும். ஆனால் விஜயகுமார் செய்யவில்லை. ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு இதுதான் நியாயமா, இந்த கேள்வியை விஜயகுமாரை கேட்பதில் தவறு ஏதும் இல்லை, என்று பேசியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்