- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது சம்பளத்தை 25 மடங்கு உயர்த்திய காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி - அரண்டு...

தனது சம்பளத்தை 25 மடங்கு உயர்த்திய காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி – அரண்டு போன தயாரிப்பாளர்கள்!

- Advertisement -

இப்போதெல்லாம் படத்தின் பட்ஜெட்டில் 75 முதல் 80 சதவீதம் வரை நடிகர் நடிகைகள் இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஸ்டண்ட் மாஸ்டர் சம்பளமாகவே போய்விடுகிறது. மீதி 20 சதவீதம் பணத்தில்தான் படமே உருவாகிறது. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் தயாராகிறது என்றால் அதில் ஹீரோ சம்பளமே 180 கோடி ரூபாய் என்றால், மீதி 70 கோடி ரூபாயில்தான் மற்றவர்களுக்கு சம்பளமும், படத்தின் மேக்கிங் செலவும் ஒதுக்கப்படுகிறது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரிஷப் ஷெட்டி. இவர் கடந்த 2022ம் ஆண்டில் காந்தாரா என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து தயாரித்து ஹீரோவாக நடித்தார். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படம் முதலில் கன்னடத்தில் வெளியாகி பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

மொத்தமே 15 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் உருவான காந்தாரா படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. படம் பார்த்த அனைவருமே கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து மிரண்டு போய்விட்டனர். நடிகர் ரஜினிகாந்த், தனது போயஸ்கார்டன் வீட்டுக்கு நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை வரவழைத்து பாராட்டினார்.

கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டி வாங்கிய சம்பளம் 4 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இப்போது காந்தாரா படத்தின் முன்பகுதி படமான காந்தாரா சேப்டர் 1 படத்தை இந்த படத்தின் கதாநாயகனும் இயக்குனருமான நடிகர் ரிஷப் ஷெட்டி 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும், படம் வெளியான பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு அதாவது பிராபர்ட்டி ஷேர் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

முதல் பாகம் காந்தாரா படத்தின் வெற்றியோடு ஒப்பிடுகையில் காந்தாரா இரண்டாம் பாகம் அதாவது காந்தாரா சேப்டர் 1 இன்னும் அதிக வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 100 கோடி ரூபாய் வரை ரிஷப் ஷெட்டி சம்பளம் கேட்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஏற்கனவே 100 கோடி ரூபாய்க்கு மேல் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ. 400 கோடிக்கு மேல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஒரு படம் வெற்றி பெற்றால் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் கூடுதலாக 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதுதான் வழக்கம். ஆனால் காந்தாரா படத்துக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரிஷப் ஷெட்டி 25 மடங்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. ஒரு படம் மாஸ் ஹிட் என்றால், இப்படி 25 மடங்கு அடுத்த படத்திலேயே உயர்த்துவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்