நடிகர் விஷால் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றால் அது துப்பறிவாளன்தான். அந்த படத்தில் விஷால் நடிப்பும், ரியாக்சனும், சண்டை காட்சிகளும் வேற லெவலில் இருக்கும். கனியன் பூங்குன்றன் என்ற கேரக்டரில் டிடெக்டிவ் ஆக வாழ்ந்திருப்பார் விஷால்.
இந்த படத்தில் பிரசன்னா, சிம்ரன், கே பாக்யராஜ், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், வினய், ஜெயப்பிரகாஷ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக வயதான கேரக்டரில் நடிகர் பாக்யராஜ் பக்குவப்பட்ட நடிப்பை தந்திருப்பார்.
சண்டக்கோழி, தாமிரபரணி, சிவப்பதிகாரம், நான் சிகப்பு மனிதன், மலைக்கோட்டை, பாண்டிய நாடு என பல நல்ல படங்களில் நடித்த விஷாலுக்கு, ஒரு கட்டத்துக்கு பிறகு நல்ல படங்களே அமையவில்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாகவே அமைந்தன.
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக விஷாலுக்கு பெயர் சொல்லும்படியாக வெற்றி படங்களே இல்லாத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான மார்க் ஆண்டனி மிகப்பெரிய ஹிட் படம் ஆக அமைந்தது. ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாதான்.
ஆனால் இந்த படம் மாஸ் ஹிட் ஆன பிறகும் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகாத விஷால், இப்போது துப்பறிவாளன் 2 படம் இயக்குவதில் அதிக ஆர்வமாக இருக்கிறார். துப்பறிவாளன் படத்தின் எந்த தொடர்ச்சியும் இல்லாமல், துப்பறிவாளன் 2 படத்தை புதிய கதையில், புதிய படமாக இயக்கவும் விஷால் திட்டமிட்டுள்ளார். ஆனால் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்துக்காக ஸ்கிரிப்டை மிக சூப்பராக ரெடி செய்திருப்பதாகவும், இருவரது சண்டையால் அந்த நல்ல கதை திரைக்கு வராமல் போகும் ஆபத்தும் இதில் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஷால் இப்படி துப்பறிவாளன் 2 படம் இயக்க முக்கிய காரணம் மிஷ்கின் கிடையாது. ஏற்கனவே நடிகர் விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு விஜயிடம் கதை சொல்லி இருக்கிறார் விஷால். இப்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் மூவியாக தந்துவிட்டால், விஜயை தன்னை அழைத்து அவரது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுப்பார் என்ற லட்சியத்தில்தான், இந்த படத்தை இயக்க தீவிரம் காட்டி வருகிறார் விஷால். இது அவரது வாழ்நாள் லட்சியமாகவும் கூறப்படுகிறது.





