- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா அறிவிப்பு, கிங்கை வரவேற்க சென்னை மக்கள் தயாரா?...

கங்குவா படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா அறிவிப்பு, கிங்கை வரவேற்க சென்னை மக்கள் தயாரா? – கொல மாஸ் சாரே என உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. சீனியர் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. இவரது தம்பி கார்த்தி, மனைவி ஜோதிகா ஆகியோரும் சினிமா பிரபலங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா, இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக உள்ளார்.

துவக்கத்தில் கஜினி, காக்க காக்க, பேரழகன், சிங்கம், வேல், ஏழாம் அறிவு, சில்லுன்னு ஒரு காதல் என பல வெற்றிப் படங்களை கொடுத்த சூர்யாவுக்கு சமீபமாக வந்த காப்பான், தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் பலத்த தோல்வியை தந்தன. ஜெய்பீம், சூரரைப் போற்று படங்களுக்கு பிறகு சூர்யா படங்கள் சரியான கவனிப்பை பெறவில்லை.

- Advertisement -

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கங்குவா. இந்த படம் வருகிற நவம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளார்.

கங்குவா படம் வரலாற்று கதைக்களத்தை கொண்டிருக்கிறது. சூர்யா இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். இந்த படத்தில் இரண்டு மணி நேர காட்சிகள் வரலாற்று பின்னணி கதையாகவும், அரை மணி நேரம் மட்டுமே தற்போதைய கதையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. பாபி தியோல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார்.

- Advertisement -

வருகிற நவம்பர் 14ம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் படக்குழு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து படம் குறித்த ஆர்வத்தை அதிகரிக்க செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கங்குவா படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் வருகிற 26ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் கங்குவா படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. மேலும் கிங்கை வரவேற்க சென்னை மக்கள் தயாரா என்று ஸ்டுடியோ ஸ்கிரீன் சார்பில் கேள்வி எழுப்பி ஒரு வீடியோவையும் வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்