- Advertisement -
Homeபொழுதுபோக்குஹரி இயக்கும் புதிய படத்தில் முக்கியமான கேரக்டருக்கு சரியான நடிகர் கிடைக்கலையாம், கடைசியில் அந்த கேரக்டரில்...

ஹரி இயக்கும் புதிய படத்தில் முக்கியமான கேரக்டருக்கு சரியான நடிகர் கிடைக்கலையாம், கடைசியில் அந்த கேரக்டரில் நடிப்பது இவரா?- செம காமெடி போங்க

- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா கொண்டாடும் நயன்தாராவை, தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஹரி தான். ஐயா படத்தின் மூலம், சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இயக்குநர் ஹரி, தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்தவர். அவரது படங்கள் எப்போதும் ரசிக்கும்படியாக இருப்பது இன்னும் சிறப்பு.

ஹரி இயக்கிய சாமி, சாமி 2, சிங்கம் 1,2, 3 படங்கள், தாமிரபரணி, வேல், அருள் கோவில், வேங்கை, பூஜை, யானை, ஆறு என பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. குறிப்பாக சிங்கம், சாமி, ஆறு, அருள் போன்ற படங்கள், வெற்றிப்படங்களாக அமைந்தன. இதில் நடித்த ஹீரோக்களுக்கும் அந்த படங்கள் திருப்புமுனையாக அமைந்தன.

- Advertisement -

ஹரி படங்கள் பெரும்பாலும் குடும்ப பின்னணி, பாசத்தை அடிப்படையாக கொண்ட சென்டிமென்ட் படங்களாகவே இருக்கும். பெண்களுக்கு பிடித்த படமாக இருப்பதால், ஹரி படங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக உண்டு. அதனால் குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ஆடியன்ஸ் விரும்பும் விதமான கதைக்கருவில், நல்ல நல்ல படங்களை தந்து வருகிறார் இயக்குநர் ஹரி.

இப்போது, விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார். சில மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம், சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இவரது படங்கள் பெரும்பாலும் தூத்துக்குடி பகுதியில் அதிகளவில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தில் வரும் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க சரியான நடிகர் கடைசி வரை கிடைக்கவில்லை. பல நடிகர்கள் குறித்து யோசித்தும் ஒரு கட்டத்துக்கு பிறகு, சரி இவர்தான் சரியான தேர்வு, இந்த கேரக்டரில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குநர் ஹரி முடிவு செய்து அந்த நடிகரை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, ஹரியின் புதிய படத்தில் தொழிலதிபர் கேரக்டரில் நடிக்கத்தான் நடிகரை தேடி இருக்கின்றனர். கடைசியில் இயக்குநர் கவுதம் மேனனை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இனி தொழிலதிபராக வரும் கவுதம் மேனன், ஏதேனும் பாராட்டு விழாவில் கதாநாயகனை பாராட்ட போகிறாரா, அல்லது படம் முழுக்க வில்லனாக வரப் போகிறாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஆனாலும், தொழிலதிபர் கேரக்டரில் கவுதம் மேனன் நடிப்பதற்கு, இயக்குநர் ஹரி இவ்வளவு பில்டப் செய்திருக்க வேண்டாம் என கோலிவுட் வட்டாரம் கிண்டலடித்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்