நடிகர் அஜீத்குமார் நடிப்பில் நாளை மறுதினம் 10ம் தேதி உலகம் முழுவதும் குட் பேட் அக்லி படம் ரிலீஸாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமாருடன் திரிஷா பிரபு பிரசன்னா சிம்ரன் சுனில் அர்ஜூன்தாஸ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் இருக்கின்றனர். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
பர்ஸ்ட் சிங்கிள் செகன்ட் சிங்கிள் பாடல்கள் டீசர் டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய சம்பவத்தை செய்த நிலையில், படம் குறித்து ரசிகர்கள் பலத்த ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். டிக்கெட் முன்பதிவு இதுவரை ரூ. 10 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி என்ற முக்கிய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் மற்ற மாநிலங்களில் முன்னதாக படங்கள் ரிலீஸ் ஆகும் போது படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தை பலமாக பாதிக்கின்றன.
அதனால் வழக்கமாக ரிலீஸ் படங்கள் அதிகாலை 4 மணி காலை 7 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டை போலவே கேரளா கர்நாடகா மாநிலங்களிலும் காலை 9 மணிக்குதான் குட் பேட் அக்லி முதல் காட்சி திரையிடப்பபடுகிறது. இந்த நடைமுறையை மற்ற படங்களுக்கும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் 2 மணி நேரம் 45 நிமிடம், 3 மணி நேரம் என மிக நீளமான படங்களாக இருந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து விடுகின்றன. அதனால் 2 மணி நேரம் 20 நிமிடம்தான் குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் என்பது ரசிகர்களை நிம்மதியடைய செய்திருக்கிறது.
குட் பேட் அக்லி படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் படத்துக்கு யு/ஏ 16பிளஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் பல இடங்களில் வருகின்றன. அந்த அக்லி வார்த்தைகளை எல்லாம் சென்சார் குழு மியூட் செய்ய உத்தரவிட்டு, படக்குழு தரப்பில் மியூட் செய்யப்பட்டுள்ளது. ஏகே நடித்த படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளை பேசறாங்க என்பதே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.





