விஜய் எப்போதும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுகளை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கமாட்டார். தொடக்கத்தில் “ராஜாவின் பார்வையிலே” திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின் “பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதற்கு பிறகு சோலோ ஹீரோவாகவே கலக்கிய விஜய், பல ஆண்டுகளுக்குப் பிறகு “நண்பன்” திரைப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நடித்தார். இந்த நிலையில் மாதவனும் விஜய்யும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தில் விஜய் நடிக்கவில்லையாம். அது என்ன திரைப்படம் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.
இயக்குனர் லிங்குசாமி, விஜய்யையும் மாதவனையும் மனதில் வைத்து ஒரு கதையை எழுதியிருக்கிறார். அந்த கதையை விஜய்யிடம் சென்று கூறியபோது, விஜய் “வேலாயுதம்” திரைப்படத்திற்காக அனைத்து கால்ஷீட்களையும் கொடுத்திருந்தாராம்.

ஆதலால் அத்திரைப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனதாம். அதன் பின் அந்த கதையில் ஆர்யா நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர்தான் “வேட்டை”. இத்திரைப்படம் ஒரு பக்காவான கமர்சியல் திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தில் ஒரு வேளை விஜய் நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். அதே போல் இயக்குனர் லிங்குசாமி “ரன்” திரைப்படத்தின் கதையையும் விஜய்யை மனதில் வைத்துத்தான் எழுதியிருக்கிறார். அது போல் “சண்டக்கோழி” திரைப்படத்தின் கதையையும் முதலில் விஜய்யிடமே கூறியிருக்கிறார்.

ஆனால் விஜய்யோ ராஜ்கிரண் கதாபாத்திரம் தனது கதாபாத்திரத்தை விட வீரியமாக இருக்கிறது என்று நினைத்தாராம். ஆதலால் “சண்டக்கோழி” திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. இவ்வாறு லிங்குசாமி இயக்கத்தில் மூன்று திரைப்படங்கள் மிஸ் ஆகியிருக்கிறது. எனினும் பின்னாளில் லிங்குசாமி இயக்கத்தில் விஜய் நடிப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





