- Advertisement -
Homeபொழுதுபோக்குநாம எவ்வளவுதான் குட்டா இருந்தாலும் இந்த உலகம்… தீப்பொறி பஞ்ச் டயலாக்குடன் வெளியான அஜீத் பட...

நாம எவ்வளவுதான் குட்டா இருந்தாலும் இந்த உலகம்… தீப்பொறி பஞ்ச் டயலாக்குடன் வெளியான அஜீத் பட டீசர் – விஜய் பட சாதனையை முறியடித்ததா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த மாதம் 6ம் தேதி வெளியான மாபெரும் தோல்வியை தழுவியது. இது ஏகே ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளியது.

விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா வில்லனாக அர்ஜூன் ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்து இருந்தார். எனினும் படத்தின் கதைக்களமும் திரைக்கதையும் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த திருப்தியை தராமல் ஏமாற்றியது.

அதைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் திரிஷா நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் 3 கேரக்டர்களில் அல்லது 3 கெட்டப்புகளில் நடிகர் அஜீத்குமார் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், நேற்றிரவு இந்த படத்தின் டீசர் வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் டீசரில், நாம எவ்வளவுதான் குட்டா இருந்தாலும் இந்த உலகம் நம்மை பேட் ஆக்குது என்ற தீப்பொறி பறக்கும் பஞ்ச் டயலாக் பேசி நடித்துள்ள அஜீத்குமார் வரும் மாஸ் ஆன காட்சிகளும், கெத்தான கெட்டப்புகளும் அவரது ஸ்டைலும் பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

நிச்சயமாக இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று ஏகே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜீத்குமாரின் மிக தீவிரமான அவரது ரசிகர் என்ற முறையில் தன் அபிமான நடிகரை எந்தளவுக்கு படத்தில் சிறப்பாக காட்ட முடியுமோ அப்படி காட்சிக்கு காட்சி காட்டி அசத்தி இருக்கிறார். டீசர் வெறித்தனமாக இருப்பதாக ஏகே ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

நேற்று இரவு குட் பேட் அக்லி டீசர் வெளியான நிலையில் யூ டியூப்பில் கடந்த 16 மணி நேரத்தில் 25 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்துள்ளனர். தொடர்ந்தும் பார்த்து வருகின்றனர். விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பேர் மட்டுமே பார்த்த நிலையில், அந்த சாதனையை அஜீத்குமாரின் குட்பேட் அக்லி படத்தின் டீசர் முறியடித்துள்ளது. இது ஏகே ரசிகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/jl-sgSDwJHs?si=Ni2L-OnhBm6Eb-vG

சற்று முன்