- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் திலகம் சிவாஜி கணேசனையே நேரில் கலாய்த்த காமெடி கிங் கவுண்டமணி - அதுவும் கமல்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே நேரில் கலாய்த்த காமெடி கிங் கவுண்டமணி – அதுவும் கமல் நடிச்ச பெரிய ஹிட் படமாச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி கிங் என அழைக்கப்படுபவர் கவுண்டமணி. கடந்த 1980களில் துவங்கி 2010ம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனிமுத்திரை பதித்தவர். கவுண்டமணி செந்தில் காம்போ காமெடியை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 10 15 ஆண்டுகளாக நடிகர் கவுண்டமணி நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். சமீபகாலத்தில் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. ஒத்த ஓட்டு முத்தையா போன்ற சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் கவுண்டமணியின் மனைவி மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் கவுண்டமணியை பொருத்த வரை தன்னுடன் நடிக்கும் ஹீரோ நடிகர்களை சிறிதும் தயக்கமின்றி கலாய்த்து தள்ளி விடுவார். அது ஜாம்பவான் நடிகர்களாக இருந்தாலும் கவுண்டமணி கவலைப்பட மாட்டார். அதனால்தான் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற நட்சத்திர நடிகர்களே கவுண்டமணியுடன் நடிக்கும் போது சற்று தயக்கம் காட்டுவார்கள்.

நடிகர் கமல்ஹாசன் கதை திரைக்கதை வசனம் எழுதி ஹீரோவாக நடித்த படம் தேவர் மகன். இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்பாவாகவும் கமல் மகனாகவும் நடித்திருப்பார். நாசர் வில்லனாக நடித்திருப்பார். ஊர் பஞ்சாயத்தில் சிவாஜியை நாசர் இழிவாக பேசிவிடுவார். அந்த அவமானத்தில் வேதனையில் வீட்டில் படுத்திருக்கும் சிவாஜி கணேசன், குழந்தைகளை முதுகில் மிதிக்க சொல்லி விட்டு அந்த அவமான வலியால் உயிரிழந்து விடுவது போன்ற காட்சி படத்தில் இடம்பெற்றது.

படம் ரிலீஸ்க்கு முன்பாக சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் தேவர் மகன் படம் பிரிவ்யூ ஷோ காட்டப்பட்டது. படம் பார்த்த பலரும் அங்கிருந்த சிவாஜி கணேசன், கமலை பாராட்டிவிட்டு சென்றனர். ஆனால் அங்கு படம் பார்த்த கவுண்டமணி மட்டும் ஒன்றும் பேசாமல் செல்வதை பார்த்த நடிகர் சிவாஜி கணேசன், கவுண்டமணியை அருகே அழைத்து என்னடா படம் எப்படி இருக்கு என்று கேட்டிருக்கிறார்.

படம் எல்லாம் நல்லாதான் இருக்குது, ஆனா… என்று கவுண்டமணி இழுத்திருக்கிறார். என்னடா சொல்லு என்ன விஷயம் என்று சிவாஜி கணேசன் மீண்டும் கேட்க, என்னங்க அய்யா அவ்வளவு பெரிய ஊர் நாட்டாமையா இருந்துட்டு கெத்தா வாழ்ந்துட்டு கடைசியில பச்சை குழந்தை மிதிச்சு செத்து போயிட்டீங்களே அதான் என்று சொல்ல, வாய்விட்டு சிரித்த சிவாஜி கணேசன் போடா, போடா என்று சொன்னாராம். அப்படி நடிகர் திலகம் நடிப்பையே கலாய்த்தவர்தான் காமெடி கிங் கவுண்டமணி.

சற்று முன்