- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் கவுண்டமணி… அவரது சோகத்துக்கு ஆறுதல் கூட சொல்லாத தமிழ் சினிமா...

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் கவுண்டமணி… அவரது சோகத்துக்கு ஆறுதல் கூட சொல்லாத தமிழ் சினிமா நட்சத்திரங்கள் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படம் மூலம் அறிமுகமானவர் கவுண்டமணி. தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள் பயணங்கள் முடிவதில்லை நான் பாடும் பாடல் வைதேகி காத்திருந்தாள் போன்ற பல படங்களில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

குறிப்பாக கடந்த 1980 90களில் வெளியான தமிழ் படங்களில் பல படங்கள் கவுண்டமணி செந்தில் காமெடிக்காகவே ஓடியவை. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் சரத்குமார் அர்ஜூன் விஜய் அஜீத்குமார் சூர்யா சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்தவர் நடிகர் கவுண்டமணி.

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு இருந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு தகவல் கேட்டவுடன் நடிகர்கள் சத்யராஜ் செந்தில் விஜய் சின்னி ஜெயந்த் இயக்குனர்கள் சுந்தர் சி கேஎஸ் ரவிக்குமார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வையாபுரி பாண்டியராஜ் நடிகை அம்பிகா ராஜேஷ் கருணாஸ் கார்த்தி நிழல்கள் ரவி இயக்குனர் பி வாசு உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சோகத்தில் வாடிய கவுண்டமணிக்கும் ஆறுதல் கூறினர்.

ஆனால் நடிகர் கவுண்டமணியுடன் பல படங்களில் நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற சீனியர் நடிகர்கள் கவுண்டமணிக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்லவில்லை. ஒரு இரங்கல் அறிவிப்பு கூட அவர்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை. அதே போல் நடிகர்கள் அஜீத்குமார் சூர்யா விக்ரம் சிம்பு ஆர்யா விஷால் சிவகார்த்திகேயன் போன்றவர்களும் நேரிலும் வரவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லை.

- Advertisement -

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனி ராஜ்ஜியமே நடத்தியவர். ரஜினியுடன் எஜமான் மன்னன் பாபா போன்ற படங்களிலும் கமலுடன் தூங்காதே தம்பி தூங்காதே பேர் சொல்லும் பிள்ளை இந்தியன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அஜீத்குமாருடன் அவள் வருவாளா படத்திலும் நடித்திருந்தார்.

வெளிநாடுகளில் ஒருவேளை இருந்தாலும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கத்தில் ஒரு இரங்கல் செய்தியாவது வெளியிட்டு இருக்கலாம். குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் பொதுச் செயலாளர் விஷால் உள்ள நிலையில் அந்த அமைப்பு சார்பில் கூட ஒரு இரங்கல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம். ஒரு மூத்த கலைஞனின் வீட்டில் நடந்த சோகத்துக்கு ஒரு ஆறுதல் கூட சொல்ல முன்வராத தமிழ் சினிமா நடிகர்களை பார்த்து ரசிகர்கள் விரக்தியடைகின்றனர்.

- Advertisement -

சற்று முன்