- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா - அதுவும் இந்த தேதியிலா? -...

தமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா – அதுவும் இந்த தேதியிலா? – உற்சாகத்தில் துள்ளிக் குதித்த இசை ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இதுவரை அவர் 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கும் பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிகளிலும் தனது இசை திறமையை வெளிப்படுத்தி இசையால் ரசிகர்களை கவர்ந்தவர்.

சமீபத்தில் லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வேலியன்ட் சிம்பொனியை இசைஞானி இளையராஜா அரங்கேற்றினார். உலகத் தரம் வாய்ந்த 80 இசைக்கலைஞர்களை கொண்டு இங்கு வேலியன்ட் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப்பட்டது. உலகளவில் சாதனை நிகழ்த்திய இளையராஜா தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் வேலியன்ட் சிம்பொனியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை பாராட்டும் விதமாக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்று அறிவித்தார். லண்டனில் வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து திரும்பிய கருணாநிதி, ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்துகளை பெற்று திரும்பிய நிலையில், இந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார்.

- Advertisement -

இசையை தவிர்த்து தனிப்பட்ட முறையில் இளையராஜா மீதான விமர்சனங்கள் சர்ச்சைகள் நிறைய இருந்தாலும் இசையை பொருத்த வரை அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்றப்பட்ட தன்னிகரற்ற ஒரு ஜாம்பவானாக அரை நூற்றாண்டு காலமாக திகழ்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதனால் அரசின் இந்த பாராட்டு விழா அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சூழலில் இப்போது இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடத்தும் பாராட்டு விழா குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி இந்த விழாவை நடத்துவது என்றும் சென்னை கலைவாணர் அரங்கம் அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்