- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமன் படத்தோட கதையை நான் எழுதலே… சினிமாவுக்கு வர்றதுக்கு முன்பே அதை செஞ்சுட்டேன் - ஓபனாக...

மாமன் படத்தோட கதையை நான் எழுதலே… சினிமாவுக்கு வர்றதுக்கு முன்பே அதை செஞ்சுட்டேன் – ஓபனாக பேசிய நடிகர் சூரி!

- Advertisement -

நடிகர் சூரி நாயகனாக நடித்த மாமன் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரண் சுவாசிகா நட்டி நடராஜ் பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தாய்மாமன் உறவை பற்றிய ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். நாகேஷ் கவுண்டமணி வடிவேலு சந்தானம் வரிசையில் அடுத்ததாக சூரியும் ஹீரோவாக மாறினார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்ததாக விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து மாமன் படத்திலும் சூரி நடித்திருக்கிறார்.

- Advertisement -

மாமன் படத்துக்கு ரசிகர்கள் நல்ல பாசிட்டிவ் விமர்சனம் தந்து வருகிற நிலையில் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் சூரி. அடுத்ததாக மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் சூரி நடிக்கிறார். இது மீனவர் பற்றிய கதை. மகிமா நம்பியார் சத்யராஜ் போன்றவர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மாமன் படம் பிரமோவுக்காக நேர்காணல் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் பங்கேற்ற நடிகர் சூரி கூறியதாவது, மாமன் படத்துக்காக நான் ஸ்டோரி எழுதலை. அதாவது யோசிச்சு பேனா எடுத்து பேப்பர்ல இந்த மாமன் கதையை எழுதலே. எல்லாம் நான் பார்த்த ஒவ்வொருத்தர் வாழ்க்கையில் இருந்தும் அந்த கதையை எடுத்தேன் என்பதுதான் சரி.

- Advertisement -

காரில் போகும் போது ஒருத்தரை பார்த்து பேசும்போது அதில் இருந்து சில விஷயங்களை நான் எடுத்துக்குவேன். அப்படி கேட்ட பார்த்த விஷயங்களை நான் கதையாக உருவாக்குவேன். சினிமாவுல நடிக்க வர்றதுக்கு முன்னாடியே கோவித் காலகட்டதில் நான் 6 அல்லது 7 கதை எழுதியிருக்கிறேன்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே கடந்த 2000ம் ஆண்டுகளில் நான் 7 மேடைகளில் நான் டிராமா நடத்தியிருக்கேன். அப்படி எழுதினதுல ஒண்ணுதான் மாமன் படம் என்று அந்த நேர்காணலில் நடிகர் சூரி வெளிப்படையாக கூறியிருக்கிறார். தனது தந்தையின் வாழ்க்கை கதையை டைரக்ட் செய்து நடிக்கப் போவதாக ஏற்கனவே சூரி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்