- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயுடன் யோஹான் திரைப்படம் கை கூடாமல் போனதற்கு இதுதான் காரணம்... மனம் திறந்து பேசிய இயக்குனர்...

விஜயுடன் யோஹான் திரைப்படம் கை கூடாமல் போனதற்கு இதுதான் காரணம்… மனம் திறந்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன்… என்னது தளபதி அப்படி சொல்லி இருந்தாரா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். காதல் திரைப்படமாக இருந்தாலும் சரி காவல்துறை சம்பந்தமான திரைப்படமாக இருந்தாலும் சரி இல்லை ஆக்சன் படமாக இருந்தாலும் சரி தனக்கே உண்டான இயக்கத்தின் நுட்பத்தை காட்டி கைத்தட்டலை வாங்கி விடுவார் கௌதம் மேனன். இதற்காகவே அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இங்கு இருக்கிறது.

 

- Advertisement -

மின்னலே திரைப்படத்தில் தொடங்கி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என அவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றன. கடைசியாக அவர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

 

- Advertisement -

இதில் அவரே தயாரிப்பாளராகவும் செயல்பட்டார். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 2023 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று உறுதியாக கூறப்பட்டது. ஆனால் அப்போதும் ஏதேதோ காரணங்களால் படம் தள்ளிப் போனது.

 

இதன் டீசரும் விக்ரமின் தோற்றமும் நன்றாக இருந்த சூழலில், இப்போது வரை துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தற்போது கௌதம் மேனன் மம்முட்டியை வைத்து டாமினிக் என்னும் நேரடி மலையாள திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்கும் கதை தான் இது என்று கூறப்படுகிறது.

 

கமல்ஹாசன் அஜித் என மூத்த நடிகர்களுடன் பணி புரிந்திருக்கும் கௌதம் மேனன், ஆரம்பத்தில் விஜய் உடனும் இணைவதாக இருந்தார். இந்த திரைப்படத்திற்கு யோஹான் அத்தியாயம் ஒன்று என பெயர் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான ஸ்டில்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்காமலேயே நிறுத்தப்பட்டு விட்டன.

 

சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் கௌதம் மேனன் இதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதில், விஜய்யிடம் இரண்டரை மணி நேரம் கதை கூறினேன். அதைக் கேட்டு முடித்துவிட்டு இது முழுக்க முழுக்க ஆங்கில படம் போல் இருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு எடுபடாது என்று கூறிவிட்டார் விஜய். படத்தின் ஹீரோயின் அமெரிக்கனாக இருக்கிறார். இது தமிழ் படம் போல் தெரியவில்லையே என்று தெரிவித்து விட்டார். இன்னைக்கு எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தை தான் நான் 12 வருடங்களுக்கு முன்பே விஜய்யிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்