- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிமுக திமுக வுல லீடர் இல்லையா? தவெகவினருக்கு கோபம் வருவது ஏன்? - விஜய் சேதுபதிக்கு...

அதிமுக திமுக வுல லீடர் இல்லையா? தவெகவினருக்கு கோபம் வருவது ஏன்? – விஜய் சேதுபதிக்கு வலுக்கும் ஆதரவு – ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு!

- Advertisement -

விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி கடந்த சனிக்கிழமை அன்று பேசுகையில், லீடர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்றுவேலை என்று பேசியிருந்தார்.

இதில் எந்த இடத்திலும் முதல்வர் விஜய் என்றோ தவெக கட்சி என்றோ அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் விஜயை தான் அப்படி சுட்டிக்காட்டி பேசினார் என்று தவெக கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இன்னும் தவெக சார்ந்த ஒரு சில நிர்வாகிகள், இனி விஜய் சேதுபதி படம் ஓடிவிடுகிறதா என்று பார்த்து விடுவோம் என்றும் இணையத்தில் மிரட்டல் விடுத்து பதிவுகளை செய்து வருகின்றனர். ஆனால் விஜய் டிவி நிர்வாகம், விஜய் சேதுபதி பேசியது அந்த நிகழ்ச்சி சார்ந்த ஒரு கருத்து தானே தவிர வெளியில் யாரையும் குறிப்பிடுவது அல்ல என்றும் விளக்கம் தந்துள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகர் விஜய் சேதுபதி பேசியது பொதுவான கருத்து. இதில் தவெகவினர் ஆவேசப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறியிருக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி தனது பதிவில், விஜய் சேதுபதி அப்படி பேசும் நபர் அல்ல, எதையும் நேரடியாக பேசக்கூடியவர் என்றும் உறுதியாக சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழலில் தொடர்ந்து தவெக கட்சியினர் விஜய் சேதுபதி மீது வன்மத்துடன் பதிவுகளை செய்து வருகின்றனர். தவெக எம்எல்ஏக்கள் சிலரும் இதுகுறித்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். லீடர் குறித்தும் லீடர்ஷிப் குறித்தும் விஜய் சேதுபதி கூறிய கருத்துகளில் தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும், தலைமை பண்பு என்றால் என்ன என்றும் விளக்கி பேசியிருக்கிறார்.

அப்படி பார்த்தால் அதிமுகவில் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். திமுகவில் தலைவராக முக ஸ்டாலின் இருக்கிறார். மதிமுகவில் வைகோ இருக்கிறார். விசிகவில் திருமாவளவன் இருக்கிறார். தேமுதிகவில் பிரேமலதா இருக்கிறார். அந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அமைதியாக இருக்கும் போது தலைவருக்கே தகுதியற்றவர் என்ற விஜய் சேதுபதியின் கருத்துக்கு விஜய்தான் தகுதியானவர். பொருத்தமானவர் என்ற முடிவுக்கு அவரது கட்சியினரே வந்துவிட்டனர். குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது என்று சமூக வலைதளங்களில் தவெகவினரை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு என்றும் கிண்டல் செய்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்