நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது விஜயின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரிீமேக் படம்தான் இது என்று ஜனநாயகன் படம் குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஐயா இது தளபதி படம். மற்ற எதைப்பற்றியும் படம் பார்க்க வருபவர்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு ஷோ பார்த்துவிட்டு பிறகு எதையும் முடிவு செய்யுங்கள் என்று படத்தின் இயக்குனர் எச் வினோத் கூறியிருக்கிறார்.
அரசியல் களத்தில் உள்ள நடிகர் விஜய், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விடுவார். அவர் வருகிற சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப் போவது இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அவரது ஜாதகம் அவரை தோற்க விடாது. நிச்சயம் அவர் தேர்தலில் ஜெயிப்பார் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச் வினோத் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து எச் வினோத் கூறியதாவது, என்னுடைய தனிப்பட்ட கருத்தாக அதைப் பற்றி என்ன சொல்வது? அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே நமக்குத் தெரியும்.
தலைவா படத்துக்கு முன்பே அவரது ரசிகர் மன்றங்களை அரசியலுக்கான இயக்கமாகத்தான் மாற்றி நடத்தி வந்தார்கள். அதனால் அவர் அரசியலுக்கு வந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒருவேளை அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால்தான் நான் ஆச்சரியப்பட்டு இருப்பேன். அவருக்கு எந்த ஒரு விஷயத்திலும் ஒரு உறுதியான பிடிவாதம் இருக்கிறது. ஒன்றை எடுத்துவிட்டால் அதை நிச்சயமாக செய்து முடிப்பார்.
அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஏகப்பட்ட அவமானங்கள் நெருக்கடிகள் என எல்லாவற்றையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதற்கான திறமையையும் உழைப்பையும் போட்டு மேலே வந்து இருக்கிறார். அதே மாதிரிதான் இப்போது விஜய் அரசியலுக்கும் வந்திருக்கிறார் என்று இயக்குனர் எச் வினோத் அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





