தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எச் வினோத். சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் 1 போன்ற அவரது படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. அடுத்து நடிகர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு போன்ற படங்களை எச் வினோத் இயக்கினார். இந்த படங்களும் சிறந்த படங்களாக ரசிகர்களுக்கு இருந்தன.
இந்த படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை எச் வினோத் டைரக்ட் செய்தார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் சென்சார் போர்டில் ரீவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஜூன் மாதம் தான் திரைக்கு வரும் என்றும் தகவல் பரவி வருகிறது.
அதற்கு காரணம் வருகிற மார்ச் மாதம் 10ம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் வருகின்றன. மேலும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதனால் ஜூன் மாதம்தான் இந்த படம் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த படம் ரிலீஸ் இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர்.
ஜனநாயகன் படத்துக்கு பிறகு இயக்குனர் எச் வினோத் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்க கமிட் ஆகியிருந்தார். ஆனால் ஏற்கனவே கமிட் ஆன 2 படங்களை தனுஷ் முடிக்க வேண்டி இருப்பதால் இந்த படம் ஓராண்டுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. வருகிற 2027ம் ஆண்டில் மார்ச் மாதம் தான் எச் வினோத் தனுஷ் இணையும் படம் ஷூட்டிங் துவங்கப்படும்.
மேலும் நடிகர்கள் கார்த்தி மற்றும் விக்ரம் நடிக்கும் படங்களை எச் வினோத் இயக்க உள்ளார். அதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் அது முடிவாகவில்லை. இதற்கிடையே எச் வினோத் ஒரு சின்ன படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக நடிகர் யோகிபாபு நடிக்கிறார்.
விஜய் அஜீத்குமார் கார்த்தி போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் எச் வினோத். அவர் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோவாக யோகிபாபு நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்த சூழ்நிலையில் காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தை எச் வினோத் இயக்குவது பலருக்கும் குழப்பத்தை தந்துள்ளது.





