- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தியின் மாஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கும் அஜித் பட இயக்குனர்... அடேங்கப்பா அறிவிப்பே...

கார்த்தியின் மாஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கும் அஜித் பட இயக்குனர்… அடேங்கப்பா அறிவிப்பே அமர்க்கள படுத்துதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களைக் கொடுத்து, தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் நடிகர் கார்த்தி. ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த அவர், அமீர் மூலம் பருத்திவீரன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற கார்த்தியின் புகழும் ஊர் எங்கும் பரவியது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, சர்தார் என ஏராளமான வெற்றி படங்களை அவர் கொடுத்துள்ளார். இதில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் கார்த்தியை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது என்று கூறலாம்.

- Advertisement -

சதுரங்க வேட்டையிலேயே நம்மை அனைவரையும் கவனிக்க வைத்த ஹெச் வினோத்தான் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

90களில் வட மாநில கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் வீடு புகுந்து கொள்ளையடிப்பதையும், அவர்களைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் கண்முன்னே காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் வினோத். நவீன தொழில்நுட்பங்கள் எதுவுமே இல்லாத அந்த நேரத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் சிரமப்பட்டதையும் அதில் விவரித்து இருந்தார்.

- Advertisement -

சிறிது கூட பிசிறு தட்டாமல் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய திரைப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கினார் வினோத். இந்த நிலையில் தற்போது அவர் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து இருக்கிறார். இந்த திரைப்படம், கமல்ஹாசன் எழுத்தில் உருவாக இருந்த தலைவன் இருக்கிறான் கதைதான் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக திரைக்கதை எழுதும் வேலையில் மட்டும் எச் வினோத் ஈடுபட போகிறாராம். இதன்பிறகு அவர் யாருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கத்தான் வினோத் திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்கான முழு ஸ்கிரிப்டையும் கமல் படத்தை முடித்த பிறகு வினோத் உருவாக்குகிறார். இதன் காரணமாக விரைவில் வினோத் – கார்த்தி கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்