பெரும்பாலானவர்களுக்கு 50 வயது கடந்து விட்டாலே முட்டுவலி இடுப்பு வலி சோர்வு போன்ற பாதிப்புகள் வந்து முடங்கி போய்விடுகின்றனர். பிபி சுகர் என்று அதுவும் ஒருபுறம் அவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் 75 வயதில் தேனீ போல சுறுசுறுப்பாக காணப்படுகிறார். இன்னும் அவர் பழைய வேகத்தில் விறுவிறு என நடப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் ரஜினிகாந்தின் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைகள்தான். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி என்பதை ரஜினி வழக்கமாக செய்து வருகிறார். மேலும் தியானம் யோகா பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்கிறார். பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சி, மனதை ஒருமுகப்படுத்த மந்திரங்களை சொல்லிக்கொள்வது அவரது வழக்கமாக உள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் வெள்ளை நிற உணவுப் பொருட்களை தவிர்த்து வருகிறார். குறிப்பாக இட்லி தோசை சாதம் மைதா அஸ்கா சர்க்கரை போன்றவற்றை தவிர்த்து வருகிறார். அத்துடன் மாத்திரைகள் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தி விட்டதாகவும் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் அவரது டயட் குறித்த ரகசியம் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்தது வத்தக்குழம்பு தான். அடிக்கடி வத்த குழம்பு விரும்பி சாப்பிட்டு வருகிறார். அதுவும் அந்த வத்தக்குழம்பு நன்றாக கெட்டியாக வெயிலில் காய வைத்த காய்கறிகளுடன் புளி மற்றும் மணத்தக்காளி சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இதை சூடான சாதம் மற்றும் நெய்யுடன் கலந்து அவர் எடுத்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக பால் பாயாசத்தை அடிக்கடி விரும்பி சாப்பிடுகிறார். பால் கெட்டியாகி தந்தத்தின் நிறம் வரும் வரை கிரீம் போன்று சுவை வரும் வரை அது தயாரிக்கப்படுகிறது. இதற்கு பொறுமையாக இருந்து பாயாசத்தை சுட வைக்க வேண்டும்.
அதற்கு பிறகு ரஜினிக்கு மிகவும் பிடித்த உணவாக மாதுளை பழச்சாறு உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் ரஜினிகாந்த் தனது உணவுகளில் உப்பு சர்க்கரை மைதா பால் மற்றும் தயிர் ஆகியவற்றை தவிர்க்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படி ரஜினிகாந்த் உணவில் முழு கவனமாக இருந்து வருவதால் தான் அவர் எப்போதுமே சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.





