- Advertisement -
Homeபொழுதுபோக்குஹரீஷ் கல்யாண் செய்த அந்த விஷயம், இந்த வேலை எல்லாம் இங்க வேணாம், டென்சன்...

ஹரீஷ் கல்யாண் செய்த அந்த விஷயம், இந்த வேலை எல்லாம் இங்க வேணாம், டென்சன் ஆன இயக்குநர் வெற்றிமாறன் – அவர்கிட்ட போய் இப்படி நடந்துக்கலாமா ப்ரோ?

- Advertisement -

நடிகர் ஹரீஷ் கல்யாண், தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு நடிகராக இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பார்க்கிங் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக பார்க்கிங் உள்ளது. இதற்கு முன்பு, இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும், பொறியாளன், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். முந்தைய சீசன் ஒன்றில், இவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இப்போது நடந்து வரும் சீசன் 7 நிகழ்ச்சியிலும், ஒரு நாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார். அப்போது, பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து, ஒருநாள் பிக்பாஸ் வீட்டில் தங்கிச் சென்றார்.

- Advertisement -

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு, இயக்குநர் வெற்றிமாறன் படங்களில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்து வருகிறது. ஏனெனில் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தாலே, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையலாம். அதுமட்டுமின்றி, அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

அதற்காக சினிமாத்தனமாக ஒரு யோசனையை செய்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். அதாவது வெற்றிமாறனின் வீடு எங்கே இருக்கிறது எனத் தெரிந்துக்கொண்ட அவர், தொடர்ந்து 3 நாட்களாக சென்று காலிங் பெல் அழுத்தி கதவை திறக்கும் நபரிடம் பிளவர் பொக்கே ஒன்றை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்து 4வது நாளில், அதேபோல் வெற்றிமாறன் வீட்டு கதவை தட்டி பிளவர் பொக்கேவை நீட்டி இருக்கிறார் ஹரீஷ் கல்யாண். ஆனால் அப்போது இயக்குநர் வெற்றிமாறனே கதவை திறந்திருக்கிறார். எதுக்காக இப்படி காரணமே இல்லாமல் பிளவர் பொக்கே காலையில் கொண்டு வந்து தர்றீங்க என கேட்டும் இருக்கிறார். நீங்கள் என்னை நினைவில் வைத்திருந்தால், நீங்கள் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவீர்கள் என்பதால்தான் என்று கூறியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

டென்சன் ஆன வெற்றிமாறன், நான் எடுக்கும் படத்தில் உங்களை போன்ற கேரக்டர் எனக்கு தேவை என்றால், நானே அழைக்கிறேன். அதுவரை இப்படி எல்லாம் வந்து தொந்தரவு செய்யக்கூடாது, புறப்படுங்கள் என வெளியே அனுப்பி இருக்கிறார். கதைக்கான கேரக்டர்களை தேர்வு செய்யும் அவரிடம் போய், சிம்பதி கிரியேட் பண்ணி சான்ஸ் வாங்க ஆசைப்பட்டு, நொந்து போய் ஹரீஷ் கல்யாண் திரும்பியதாக, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்