- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சுதந்திர தின...

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சுதந்திர தின நாளில் ரசிகர்களுக்காக அவர் வெளியிட்ட திடீர் அறிக்கை!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். 74 வயதிலும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நேற்று அவரது நடிப்பில் வெளியான கூலி படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது அவர் பெங்களூருவில் உள்ள ரமணா ஆசிரமத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அங்கு ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று இணைத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1975ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகவங்கள், ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இப்போது 2025ம் ஆண்டில் அவர் இன்று 50 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். கூலி அவர் நடிப்பில் வெளியாகி உள்ள 171வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

- Advertisement -

இந்த படத்தை பொருத்த வரை ரஜினிகாந்த் நடிப்பை யாராலும் குறை சொல்ல முடியவில்லை. 74 வயதிலும் தனது அனுபவப்பட்ட சிறந்த அழுத்தமான நடிப்பையே அவர் ரசிகர்களுக்கு தந்து உற்சாகப்படுத்தி இருக்கிறார். சண்டை காட்சிகள் பாடல் காட்சிகளிலும் ரஜினியின் சுறுசுறுப்பு சற்றும் குறையவில்லை. ஆனால் கதை திரைக்கதை இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் சொதப்பி விட்டதாகவே ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலக பயணத்தையொட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

- Advertisement -

மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு நன்றி.

நடிகர்கள் கமல்ஹாசன் மம்முட்டி மோகன்லால் வைரமுத்து இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்