- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனைத்து சாதனைகளையும் முறியடித்த குட் பேட் அக்லி பட டீசர்... யூடியூபில் ரெட் டிராகனாக மாஸ்...

அனைத்து சாதனைகளையும் முறியடித்த குட் பேட் அக்லி பட டீசர்… யூடியூபில் ரெட் டிராகனாக மாஸ் காட்டிய ஏகே…

- Advertisement -

அஜித் ரசிகர்கள் அல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது எதிர்பார்த்து காத்திருப்பது குட் பேட் அக்லி திரைப்படத்திற்காகத்தான். விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் வேதனையில் ஆழ்ந்த ஏகே ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த திரைப்படத்தின் டீசர் அமைந்திருக்கிறது என்று கண்டிப்பாக கூறலாம். ஏகே ஒரு ரெட் டிராகன் என்ற வசனத்தோடு ஆரம்பிக்கும் டீசரில் முழுக்க முழுக்க அஜித் மட்டுமே வருகிறார். அதுவும் நாம் ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்து ரசித்த அஜித் கதாபாத்திரங்களை ஒருசேர கொண்டு வந்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

- Advertisement -

சொல்லப்போனால் தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை அவர் சரியாக காட்டியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். பேன் பாயாக இந்த திரைப்படத்தில் அவர் சம்பவம் செய்திருக்கிறார் என்பதை டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. மிக முக்கியமாக பில்லா ரெட் அமர்க்களம் வாலி கதாபாத்திரங்களை அடங்கிய அஜித்தை அவர் ஒவ்வொரு ஃபிரேமிலும் காட்டியிருக்கிறார்.

அதுவும் அஜித் குமார் மிரட்டலோடு காட்டுகிறேன் என்று கூறும் வசனமும் சரி அது என்று சொல்லும் வசனமும் சரி டீசரை பார்க்கும்போதே ரசிகர்களுக்கு நாடி நரம்புகள் முறுக்கேறும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு நிமிடம் 34 நொடிகள் ஓடும் இந்த டீசரில், பல விஷயங்கள் ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளன.

- Advertisement -

இப்படி பல்வேறு சுவாரசியங்கள் அடங்கியிருக்கும் இந்த டீசர், இணையத்தில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைக் கொண்ட டீசராக தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கிறது குட் பேட் அக்லி. மாஸ்டர் உள்ளிட்ட முந்தைய விஜய் திரைப்படங்களின் சாதனையை இது தவிடு பொடியாக்கி இருக்கிறது.

இப்போது வரை மூன்று கோடி பார்வைகளை கடந்து இருக்கிறது. வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தில் திரிஷா பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வரும் நாட்களில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்