- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்பை விட்டு விலகும் நடிகை திரிஷா, விரைவில் அரசியலுக்கு வரப் போகிறாரா? - இதுகுறித்து திரிஷாவின்...

நடிப்பை விட்டு விலகும் நடிகை திரிஷா, விரைவில் அரசியலுக்கு வரப் போகிறாரா? – இதுகுறித்து திரிஷாவின் அம்மாவே கொடுத்த விளக்கம்!

- Advertisement -

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நயன்தாரா, திரிஷா இருவரும்தான் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக மேலாக இருந்தும் முன்னணி நாயகிகளாக இப்போதும் இருக்கின்றனர். முன்னணி ஹீரோக்களுக்கு தொடர்ந்து ஜோடியாக நடித்து வருகின்றனர்.

நடிகை திரிஷா தமிழில் அஜீத்குமாருக்கு ஜோடியாக விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸாக இருக்கின்றன. அதே போல் மலையாளத்தில் திரிஷா நடித்த ஐடென்டிட்டி படம் சமீபத்தில் வெளியாகி கவனத்தை பெற்றது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் திரிஷா நடித்த விஸ்வம்பரா படம் வெளிவர இருக்கிறது.

- Advertisement -

அடுத்து கமல் சிம்பு நடிப்பில் மணிரத்னம் டைரக்‌ஷனில் உருவான தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது. தொடர்ந்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் அவரது 45வது படத்திலும் திரிஷா ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்படி தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என திரிஷா படு பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் விஜயுடன் லிப்லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை திரிஷா மீண்டும் தி கோட் படத்தில் மட்ட பாடலுக்கு விஜயுடன் குத்தாட்டம் போட்டிருந்தார். முதன் முறையாக திரிஷா ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியது தி கோட் படத்தில் விஜயுடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகை திரிஷாவுக்கு நடிப்பில் சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அவரது அம்மா
உமா கிருஷ்ணனிடம் இனி நடிக்க எனக்கு விருப்பமில்லை, சினிமாவில் இருந்து விலகி கொள்கிறனே் என்று கூறியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் அம்மா மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது. திரிஷாவை தொடர்ந்து நடிக்குமாறு அவரது அம்மா வற்புறுத்தியாகவும் சொல்லப்பட்டது.

விரைவில் நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும், அரசியலில் அவருக்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் கூறியதாவது, திரிஷா அரசியலுக்கு எல்லாம் வரப் போவது இல்லை. அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார். இதுகுறித்து பரவும் தகவல்களில் எதுவும் உண்மை இல்லை என்று உமா கிருஷ்ணன் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்