நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த 19ம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆனது. இதுவரை 500 கோடி ரூபாய் வரை, லியோ வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இன்னும் தீபாவளி வரை வேறு படங்கள் ரிலீஸ் இல்லாததால், இன்னும் பல கோடி ரூபாய்களை, லியோ வசூல் செய்ய வாய்ப்புள்ளது.
லியோ படத்தின் ரிலீஸ்க்கு முன்பு, படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்தது. ஆனால், போலீசார் அனுமதி கிடைக்காததால், இந்த விழா நடக்கவில்லை. ஆனால், இப்போது லியோ வெற்றி விழா, நிச்சயமாக நடக்கிறது. வரும் நவம்பர் 1ம் தேதி, சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் வெற்றி விழாவை நடத்த, போலீசார் அனுமதி வழங்கி விட்டனர்.
இந்நிலையில், லியோ படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படம் குறித்த பல தகவல்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, லியோ படத்தின் வெற்றி, ரசிகர்களுக்கு கொடுத்த பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வெற்றி, தோல்வி என்றாலும் நான் சகஜமாக இருப்பதுதான் என்னுடைய இயல்பான குணம்.
ஒரு படத்தில் இருந்த சில விஷயங்களை ரெபரன்ஸ் ஆக எடுத்துக்கொண்டு உருவாக்குவது, பல படங்களில் நடந்திருக்கிறது. அந்த மாதிரியான கதை என்றால், அதுசார்ந்த படங்களை பார்த்து அந்த விஷயங்களை செய்ய வேண்டும். ஏனென்றால், அதுதான் சரியாக இருக்கும். ஆனால், நான் லியோ படத்துக்காக ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தை ரெபரன்ஸ் ஆக பயன்படுத்தவில்லை. ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தை பார்த்த பிறகே, லியோ என்ற கதையை நான் உருவாக்கினேன்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பரிசோதனை முயற்சிதான். நான் இறந்துவிட்டேன் என முழுமையாக நம்பும் ஒருவன், கடைசிவரை அதை மற்றவர்களிடம் ஒத்துக்கொள்ள மறுக்கிறான். அதுதான் கதையின் மையக்கரு. அதனால், படத்தின் மொத்த சுமையையும் தோளில் தாங்கி இருப்பது விஜய்தான். அதனால் படம் முழுக்க அவர்தான் இருக்கிறார். அவர்தான் இந்த படத்தின் மொத்தமும். இது முதலிலேயே தீர்மானித்த ஒன்றுதான்.
இந்த படத்தை பொருத்த வரை எனக்கு பெரிய டாஸ்க் ஆக இருந்துதான் ஹய்னா தான். முதலில் வரும் அந்த விஜய் ஹய்னா சண்டை காட்சிக்காக தான், 1300 பேர் அத்தனை குளிரில் கஷ்டப்பட்டோம். விஜய் வெறும் சட்டை மட்டுமே அணிந்து, அந்த காட்சியில் நடித்தார். 13 நாட்கள் அந்த காட்சி மட்டுமே எடுக்கப்பட்டது. அது சிறப்பாக வரவேண்டும் என்றுதான் நான் மிகவும் கவலைப்பட்டேன், என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





