பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியானவை. அந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விமர்சன ரீதியாக மொரட்டு அடி வாங்கியது. இதன் காரணமாக உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று விஜய்யும், அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.
இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் தொடர்பாக இரண்டு பேரும் அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.
அந்தப் புகைப்படத்தோடு எதிர்காலத்திற்கு வருக என்ற வெங்கட் பிரபு கேப்ஷனையும் போட்டிருந்தார். இதன் காரணமாக இந்தப் படம் சைன்ஸ் பிக்ஷன் ப்ளஸ் டைம் ட்ராவலை மையப்படுத்தி இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது. அதேசமயம் குடும்ப செண்ட்டிமெண்ட்தான் கதை என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. எது எப்படியோ அஜித்துக்கு ஒரு மங்காத்தா கொடுத்தது போல் விஜய்க்கும் இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்கவேண்டும் என்பதுதான் வெங்கட் பிரபு மீது தளபதி ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு.
படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் என்றும்; அதில் ஒன்று வயதான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வயதான விஜய் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் மறுக்க சினேகாவிடம் பேசி அவரை அந்தக் கதாபாத்திரத்துக்கு லாக் செய்திருப்பதாகவும் பேசப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தில் ப்ரியங்கா மோகன், ஜெய், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோரும் நடிக்கலாம் என தெரிகிறது. அதுமட்டுமின்றி ஆமிர் கானை இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க படக்குழு தீவிரமாக முயற்சித்துவருவதாகவும் எப்படியா ஆமிரை இந்தப் படத்துக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்றும் திரைத்துறையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய தகவல் ஒன்று உலா வருகிறது. அதன்படி லியோ படத்துக்கு டப்பிங்கை விரைவில் விஜய் கொடுக்கவிருக்கிறார். அதனை முடித்த கையோடு 68ஆவது படத்துக்கு பூஜை போடப்பட்டு அக்டோபர் 19ஆம் தேதி ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூலை தொடங்கவிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அக்டோபர் 19ஆம் தேதிதான் விஜய் நடித்திருக்கும் லியோ படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் தற்போது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.





