- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி அப்டேட் எப்போது? வெளியான தகவல்.. இதுவாச்சும் உண்மையா இருக்குமா?.. ரசிகர்கள் கேள்வி

விடாமுயற்சி அப்டேட் எப்போது? வெளியான தகவல்.. இதுவாச்சும் உண்மையா இருக்குமா?.. ரசிகர்கள் கேள்வி

- Advertisement -

அஜித் குமார் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். வங்கிக் கொள்ளையையும், மக்களிடம் வங்கி அடிக்கும் கொள்ளையையும் அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தனக்கு போட்டியாளர் என்று பிறரால் கருதப்படும் விஜய் நடித்த வாரிசு படத்துடன் துணிவு படம் இந்த வருட பொங்கலுக்கு களமிறங்கியது.

அந்த ரேஸில் கண்டெண்ட் ரீதியாகவும்; வசூல் ரீதியாகவும் துணிவு படம்தான் வெற்றி பெற்றதாக பலரும் கூறினர். இதனால் அஜித்தும் பயங்கர மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்பட்டது. அஜித்குமார் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அதை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு பிடிக்காததால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி படத்துக்குள் வந்தார். அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை இறுதி செய்வதில் மகிழ் திருமேனி கொஞ்சம் காலம் எடுத்துக்கொண்டார். அது அஜித்தின் அறிவுரையின் பெயரில்தான் நடந்தது என்றும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலாவியது.

சூழல் இப்படி இருக்க அஜித்குமாரோ பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் முடித்தவர் தற்போது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை நார்வே உள்ளிட்ட நாடுகளில் செய்து வருகிறார். இதனால் விடாமுயற்சியின் சூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

படத்தின் பெயரை தவிர மற்ற எந்த அப்டேட்டும் வெளியாகாததால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்; ரசிகர்கள் வலிமை அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தனரோ அதேபோல் விடாமுயற்சி அப்டேட்டக்கும் காத்திருக்கின்றனர். மேலுஜ்ம் படத்தின் தாமதம் குறித்த வீடியோ மீம்ஸ்களும் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

இந்நிலையில் அஜித் குமார் தனது பைக் சுற்று பயணத்தை விரைவில் முடித்துவிட்டு சென்னை திரும்ப இருப்பதாகவும் ஷூட்டிங்கை உடனடியாக ஆரம்பிக்க லைகா தரப்பிலிருந்து அஜித்துக்கு அழுத்தம் சென்று இருப்பதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று வெளியாகலாம் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் அப்டேட் வருவதற்கே இவ்வளவு காலம் ஆகிறது இனி எப்போது படம் ரிலீஸ் ஆகப்போகுது எப்போது பார்ப்பது என்ற கவலையிலும் இருக்கின்றனர். மேலும் 15ஆம் தேதியாவது அப்டேட் வருமா என்ற கேள்வியையும் விரக்தியுடன் கேட்டுவருகின்றனர்.

சற்று முன்