- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட் பிரபு லீவில் போயிருக்கிறார்... தளபதி 68லிருந்து வெளியான தரமான அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

வெங்கட் பிரபு லீவில் போயிருக்கிறார்… தளபதி 68லிருந்து வெளியான தரமான அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அந்தப் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தத் திரைப்படம் விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை திருப்திப்படுத்த தவறியதாக ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் 600 கோடி ரூபாய்வரை படம் வசூல் செய்து வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே லியோ படத்தில் இருந்தபோதே தன்னுடைய 68ஆவது படத்தில் கமிட்டானார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு தளபதி 68 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மீனாட்சி சௌதரி, சினேகா, பிரேம் ஜி அமரன், மைக் மோகன், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

- Advertisement -

இவர்களில் மைக் மோகன் படத்தின் வில்லன் என்று தெரிகிறது. லியோ ரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து தளபதி 68 படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் இணைந்து ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதற்கு ராஜுசுந்தரம் கோரியோகிராஃபி செய்தார்.

அந்த பாடல் ஷூட்டை முடித்துக்கொண்டு படக்குழு தற்போது வெளிநாட்டில் முகாமிட்டிருக்கிறது. அதன்படி பாங்காக்கில் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்துவருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக விஜய் சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து சென்றார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “எங்கள் ஜீனியஸ் வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அனைத்திலும் நன்மைகள் கிடைக்க வாழ்த்துகள். தளபதி 68 படத்துக்காக இன்னும் ஜாலியான படப்பிடிப்பும் வேலைகளும் இருக்கின்றன.

படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி நேற்று இரவு முழுவதும் தாய்லாந்தில் ஷூட் செய்யப்பட்டது. எனவே இன்று வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் என்பதால் அவர் விடுமுறையில் சென்றிருக்கிறார்” என குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் தாய்லாந்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்