- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்ஐசி படப்பிடிப்பில் டைரக்டர், ஹீரோ திடீர் மோதல், திகைத்துப் போன படக்குழுவினர் - கோமாளி நாயகனுக்கு...

எல்ஐசி படப்பிடிப்பில் டைரக்டர், ஹீரோ திடீர் மோதல், திகைத்துப் போன படக்குழுவினர் – கோமாளி நாயகனுக்கு என்னதாம்பா ஆச்சு?

- Advertisement -

டைரக்டர் விக்னேஷ் சிவன், போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். சிம்பு – வரலட்சுமியின் நெருக்கமான காதல் காட்சிகளும் ஊடல், கூடல் என முதல் படமே ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை டைரக்ட் செய்தார்.

இதில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய போது நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில், கடந்தாண்டில் திருமணம் செய்துக்கொண்டார். வாடகைத்தாய் மூலம், இரட்டை பிள்ளைகளின் பெற்றோராகி உள்ளனர். இப்போது, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்ற நிலையில், அவரது புகழ் இருக்கிறது.

- Advertisement -

இதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளாக அவர் படங்களை இயக்க வாய்ப்பின்றி, சினிமா பாடல் எழுதும் கவிஞராகி மாறிவிட்டார். ஏனெனில் வலிமை, துணிவு படங்களுக்கு பிறகு அஜீத்குமார் படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. விடாமுயற்சி படத்துக்கு பதிலாக, விக்னேஷ் சிவன் கதையில்தான் அஜீத்குமார் நடித்திருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் அஜீத்குமார், விக்னேஷ் சிவனை ரிஜெக்ட் செய்துவிட்டு, மகிழ்திருமேனியை தன் படத்தை இயக்குமாறு கூறிவிட்டார்.

பலகட்ட போராட்டத்துக்கு பிறகு, கோமாளி மற்றும் லவ்டுடே ஆகிய வெற்றிப்படங்களை தந்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் எல்ஐசி என்ற படத்தை, விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 65 கோடி. இதில் ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன் சம்பளம் மட்டுமே ரூ. 20 கோடி என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனே நடித்த படம் லவ்டுடே. மிகப்பெரிய சக்சஸ் படமாக அமைந்தது. அதனால், எல்ஐசி படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்தில் இருந்தே, படத்தின் கதையில், திரைக்கதையில், காட்சிகளை சில மாற்றங்களை, திருத்தங்களை விக்னேஷ் சிவனிடம் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

துவக்கத்தில், பிரதீப் ரங்கநாதனும் ஒரு டைரக்டர் என்பதால் இதை சகஜமாக எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன், ஒரு கட்டத்துக்கு பிறகு எல்ஐசி படம், பிரதீப் ரங்கநாதனிடம் படமாக மாறிவருவதை புரிந்துக்கொண்டார். அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட அவர், இது என்னோட படம், நான்தான் டைரக்டர். ஒரு படம் ஹிட் கொடுத்துட்டா நீ ரொம்ப பெரிய ஆளா, என பிரதீப் ரங்கநாதனை விளாசியிருக்கிறார். பதிலுக்கு அவரும் பதில் பேச இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புக்குழு அதிர்ச்சியமடைந்து,இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்