விஜய் நடிப்பில் லியோ படம் நேற்று வெளியானது . படத்தை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் படத்துக்கு கலவையான விமரசனத்தையே கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லை. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி லியோ படத்துக்கு தனது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
அவர் கொடுத்திருக்கும் விமர்சனத்தில், “லியோவில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. இது ரஜினிகாந்த்தின் பாட்ஷா டைப் கதைதான். அதேநேரம் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார். தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி விஜய் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஓபனிங் பாடல்,மாஸ் எண்ட்ரி என எதுவுமே படத்தில் இல்லை.
வழக்கமான விஜய்யை இதில் பார்க்க முடியவில்லை. அதேசமயம் லியோ படத்தில் சுவாரஸ்யம் என்று எதுவுமே இல்லை. பார்க்க சுமாராகத்தான் இருக்கிறது. படத்துடைய தொடக்க காட்சியில் விஜய்யின் அமைதியான வாழ்க்கை ரொம்பவே சலிப்பூட்டுகிறது. அதன் பின்னர் நடக்கும் மாற்றங்கள் ஓகே ரகம்தான். இப்படியோரு கதையில் நடித்த விஜய் அதற்காக ரொம்பவே மாறியிருப்பதும் அப்பட்டமாகவே தெரிகிறது.
இந்தப் படத்தின் கதை எந்தத் திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை. அதேபோல் வில்லன் கேரக்டரில் சஞ்சய் தத், அர்ஜுன் நடித்திருந்தாலும் அதனால் பெரிய தாக்கம் எதுவுமே இல்லை. மிஷ்கின், சாண்டி மாஸ்டர் கேரக்டர்களைவிட சஞ்சய் தத் கேரக்டர் டம்மியாக தெரிகிறது. ஆரம்பத்தில் சஞ்சய் தத்துக்கு ஓவர் பில்டப் கொடுத்துவிட்டு பிறகு அவரது பினிஷிங்கில் வெயிட்டே இல்லை. அர்ஜுன் கேரக்டரும் அப்படித்தான் ஸ்கெட்ச் செய்யப்பட்டிருக்கிறது.
விஜய் பார்த்திபனாக இருக்கும்போது நன்றாக இருக்கிறது. லியோ கேரக்டர் பற்றிய பிம்பத்துக்கு செல்ஃப் எடுக்கவில்லை. அந்த சஸ்பென்ஸை படத்தின் இறுதிவரை லோகேஷ் கொண்டு சென்றதுதான் ஒரே ஆறுதல். இந்தப் படத்தில் நரபலி என்ற விஷயம் எல்லாம் தேவையில்லாத ஒன்று. படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.
மனோஜ் பரமஹம்சாவின் கேமரா ஒர்க், அன்பறிவ் மாஸ்டர்களின் ஆக்ஷன் சீன்ஸ் லியோவை தூக்கி நிறுத்துகிறது. படத்தில் இருக்கும் அதீத வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டெக்னிக்கலாக படம் நன்றாக இருந்தாலும் கதை வீக்தான்” என்றார்.





