தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற அக்டோபர் 10ம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
கூலி படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைய உள்ளது. இந்த படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி 2 படம் உருவாகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். கைதி படம் ஏற்கனவே மாஸ் ஹிட் கொடுத்த படம் என்ற நிலையில், கைதி 2 படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
கைதி 2 படத்துக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாருடைய படத்தை இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இப்போது நடிகர்கள் பிரபாஸ், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் என 3 முன்னணி ஹீரோக்களின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் யாருடன் இணைய உள்ளார் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்க ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். அவர்கள் பிரபாஸ் ஹீரோவாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் பிரபாஸ் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் லியோ படங்களை தயாரித்தவர் எஸ்எஸ் லலித்குமார். அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷை நாயகனாக ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் கதை ரெடி என்றால், இருக்கிற வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு நான் ஷூட்டிங் வர தயார் என்று தனுஷ் கூறியிருக்கிறார். ஏனென்றால் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பது தனுஷூக்கு இன்னும் சினிமாவில் உயரத்தை அதிகரிக்கும்.
இந்த சூழலில், சிவகார்த்திகேயனும் லோகேஷ் கனகராஜூம் குடும்ப நண்பர்களாக பழகி வருகின்றனர். இருவரது குடும்பங்களும் அடிக்கடி ஓட்டல்களில் சாப்பிடுவது, நிகழ்ச்சிகளுக்கு செல்வது என கூடிக்குழவி வருகின்றனர். நெருக்கமான நட்பின் காரணமாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்க எஸ்கேவும் ஆர்வமாக இருக்கிறார். அதனால் இந்த 3 ஹீரோக்களில் யாரை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்யப் போகிறார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.





