விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 துவங்கிய நிலையில் இன்று நிறைவடைய உள்ளது. இந்த சீசன் துவங்கியது முதல் பல்வேறு பிரச்னைகளும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில் ஒரு வழியாக நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று டைட்டில் வின்னர் குறித்து நடிகர் விஜய் சேதுபதி அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
பிக்பாஸ் டை்டடில் வின்னர் இறுதி போட்டியில் அரோரா திவ்யா கணேஷ் சபரிநாதன் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகிய 4 பேர் உள்ள நிலையில் இந்த நால்வரில் ஒரு போட்டியாளருக்கு டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில் இன்று இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இது உறுதியாகி விடும்.
ஆனால் உண்மையில் விஜய் டிவியில் நடந்த இந்த பிக்பாஸ் சீசனில் பல்வேறு பிரச்னைகளை செய்து வீட்டுக்குள் சலசலப்பை கலகலப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை பார்வையார்கள் பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்றது விஜே பாரு என்கிற பார்வதி தான். அவரது அடாவடியான நடவடிக்கைகளால் இந்த வீடு அல்லோலகல்லோலப்பட்டது என்றால் அது மிகையல்ல.
ஆனால் கார் டாஸ்க்கின் போது சாண்ட்ரா விஷயத்தில் மட்டும் பார்வதி கொஞ்சம் அடக்கி வாசித்து இருந்தால் நிச்சயமாக டைட்டில் வின்னர் போட்டியாளர்களில் ஒருவராக அவரும் இருந்திருப்பார். அதே போல் கம்ருதீனுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அவரும் டைட்டில் வின்னராக வாய்ப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் பார்வதி கம்ருதீன் இருவருமே சாண்ட்ரா விவகாரத்தால் நல்ல வாய்ப்பை இழந்து விட்டனர். அதற்கு பிறகு டைட்டில் வின்னர் இவர்தான் என்கிற ஒரு தீர்மான முடிவில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தவர் கானா வினோத் தான். ஆனால் அவரும் பணப்பெட்டி டாஸ்க்கில் திடீரென வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் தள்ளியது
இந்த சூழலில் தற்போது இறுதி போட்டியாளர்களில் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் என்பது உறுதியாகி விட்டது. 2ம் இடத்தில் ரன்னராக சபரிநாதன் இருக்கிறார். விக்கல்ஸ் விக்ரம் இந்த சீசனில் 3ம் இடத்தில் வெற்றியாளராகவும் அரோரா 4ம் இடத்தில் வெற்றியாளராகவும் உள்ளனர். சிலருக்கு திவ்யா கணேஷ் டைட்டில் வின்னர் என்பது அதிருப்தியாக இருந்தாலும் கடந்த சீசன்களில் இதே போல் ரித்விகா ராஜூ அசீம் போன்ற மிக்சர் போட்டியாளர்கள் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.





