- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் நடித்த இந்தி நடிகர் போட்ட 2 கண்டிஷன் - சூப்பர் ஷோ...

ஜெயிலர் 2 படத்தில் நடித்த இந்தி நடிகர் போட்ட 2 கண்டிஷன் – சூப்பர் ஷோ நிகழ்ச்சியில் ஓபனாக சொன்ன நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வருகிற 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இப்போதே முன்பதிவு விறுவிறுப்பாக துவங்கி விட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் வெளியாவது ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த படம் அதன் தொடர்ச்சியாக 2வது பாகமாக வெளியாகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் 2ம் பாகத்திலும் நடிக்க உள்ளனர். குறிப்பாக மலையாள நடிகர் மோகன்லால் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் பிரமோஷனுக்காக ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சன் குழுமம் தலைவர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மிர்ணாள் மேனன் வித்யாபாலன் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு எஸ்ஜே சூர்யா நமோ நாராயணா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, இந்த படத்தில் ஒரு வில்லன் கேரக்டரில் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடிக்க வேண்டும் என்று நெல்சன் விரும்பி அவரிடம் கேட்டிருக்கிறார். ரஜினிக்கு நான் வில்லனா? ரஜினியிடம் நான் அடிவாங்கும் கேரக்டரில் நடிக்கணுமா? அது முடியாது என்று மறுத்து விட்டார்.

அதன்பிறகு மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் மிதுன் சக்ரவர்த்தியை சந்தித்தேன். என்ன ரஜினி? ஜெயிலர் 2 படத்தில் என்னை நடிக்க கூப்பிடறாங்க. அதுவும் வில்லன் கேரக்டராம். உன் படம் என்பதால் நடிக்க ஓகே சொல்றேன். ஆனா படத்துல உன்கிட்ட அடி வாங்க மாட்டேன், என்னை கொல்ற மாதிரி நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

அதை சரி சரி என கேட்டுக்கொண்ட நான், மீண்டும் இயக்குனர் நெல்சனை சந்தித்த போது மிதுன் சக்ரவர்த்தி சொன்ன கண்டிஷன்களை சொன்னேன். அவர் சொன்ன மாதிரி படத்துல பண்ண முடியும் என்றால், அது உங்களுக்கு சாத்தியமாக இருந்தால் அவரை நடிக்க வைக்கலாம் என்று சொன்னேன்.
அதற்கு பிறகு பார்த்தால் மிதுன் சக்ரவர்த்தியும் இந்த படத்தில் நடிக்கிறார் என்று பேசினார்.

சற்று முன்