- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் கூட இனி அம்மாதான் எனக்கு முக்கியம்… விஜயை தூக்கி எறிந்த மகன் ஜேசன்...

அந்த விஷயத்தில் கூட இனி அம்மாதான் எனக்கு முக்கியம்… விஜயை தூக்கி எறிந்த மகன் ஜேசன் சஞ்சய் – திரிஷா விவகாரத்தால் தளபதி மகன் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பாவை போல நடிகராக விரும்பாமல் தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல இயக்குனராகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை இயக்குனராக ஜேசன் சஞ்சய் உருவெடுத்து வருகிறார். அவரது முதல் படம் சிம்கா சார்ந்த ரிலீஸ் பணிகளில் மிக தீவிரமாக அவர் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்.

நட்சத்திர நடிகர் விஜயின் மகன் என்ற போதிலும் தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்ற நோக்கத்தில் ஜேசன் சஞ்சய் செயல்பட்டு வருகிறார். மேலும் தனது இயக்கத்தில் உருவாகியுள்ள சிம்கா படத்தின் டைட்டில் கார்டுகள் மற்றும் கையொப்பங்களில் தந்தையின் பெயரில் முதல் எழுத்தை இன்ஷியலாக பயன்படுத்தாமல் தாயின் பெயர் சங்கீதாவின் எஸ் என்ற முதல் எழுத்தை அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பெரும்பாலும் அனைவருமே அப்பாவின் பெயரில் உள்ள முதல் எழுத்தை இன்ஷியலாக பெயருக்கு முன்னால் போடுவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் இதில் தனது அம்மா சங்கீதாவுக்கு முன்னுரிமை தந்து அப்பா விஜயை கழட்டி விட்டுள்ளார். ஜேசன் சஞ்சயின் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் நெட்டிஷன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தனது அப்பாவின் அடையாளம் இன்ஷியலாக கூட தன்னிடம் இருக்க கூடாது என்று நினைக்கும் அளவுக்கு மகனை வெறுப்பை விஜய் சம்பாதித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் தங்கள் தந்தையின் நடிகர் புகழை கொண்டுதான் தங்கள் சினிமா பயணத்தை தொடங்கி ஜெயிக்கின்றனர். அப்படி பல வாரிசு நடிகர்கள் கோலிவுட்டில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அப்படி ஒரு வழியை தேர்வு செய்யாமல் தனது தனிப்பட்ட முயற்சியால் சினிமாவில் முன்னேற விரும்புகிறார் என்பதை காட்டும் முயற்சியாக இது உள்ளது. விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த சூழலில், நடிகை திரிஷாவுடன் திருமண விழாவுக்கு விஜய் வந்தது இந்த விவகாரத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது.

இப்படி ஒரு மோசமான சூழலில் விஜய் குடும்ப விவகாரம் உள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் எடுத்த இன்ஷியல் முடிவும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அப்பாவை தூக்கி எறிந்து விட்டு தனது சகோதரி மற்றும் தாய்க்கு ஆதரவாக மட்டுமே அவர் இருப்பதாகவும் தெரிய வருகிறது.ஒரு தாய்க்கு மகனாக ஒரு சகோதரிக்கு அண்ணனாக குடும்பத்தை வழிநடத்தும் ஒரு பொறுப்புமிக்க இளைஞராக ஜேசன் சஞ்சய் இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்