இயக்குனர் எச் வினோத் தமிழில் கவனிக்கப்பட்ட படங்களை தந்த ரசிகர்களுக்கு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் வெளிவந்த சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1, வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை என அவரது படங்கள் நல்ல வெற்றியை தந்திருக்கின்றன. அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் அவரது 69வது படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கப் போவது இல்லை, அதனால் அந்த படத்தை இயக்குவதாக கூறப்பட்ட எச் வினோத், நடிகர் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தனது படமான தீரன் அதிகாரம் 1 படத்தின் 2ம் பாகத்தை இயக்க உள்ளார். அதற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதில் சிறிதும் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் 69வது படம், தனது கடைசி படம் என்று அவரே அறிவித்துள்ள அந்த படத்தை முழுக்க முழுக்க அரசியல் படமாக எச் வினோத் இயக்க உள்ளார். வருகிற நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. கேரளாவில் தனியறை எடுத்து தங்கி, இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட்டை எச் வினோத் எழுதி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கார்த்தியை பொருத்த வரை இயக்குனர்களின் முரண்படும் ஒரு பழக்கத்தை அவர் ஆரம்பித்தில் இருந்தே கடைபிடித்து வருகிறார். உதாரணமாக அவர் முதன்முதலில் அறிமுகமான படம் பருத்தி வீரன். இந்த படத்தை இயக்கிய அமீருடன், பருத்திவீரன் படம் முடிந்த பிறகு பேசுவதையே தவிர்த்து விட்டார் நடிகர் கார்த்தி. இன்று வரை அமீருடன் தொடர்பின்றி இருந்து வருகிறார்.
அதே போல் தீரன் அதிகாரம் 1 படம் எடுக்கப்பட்ட போதே, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் எச் வினோத்துடன் சில விஷயங்களில் அவர் முரண்பட்டு நடந்துக்கொண்டு இருக்கிறார். இதனால் கார்த்திக்கும், எச் வினோத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தீரன் அதிகாரம் 1 படம் வௌியான பிறகு, எச் வினோத்துடன் பேசுவதையே தவிர்த்து விட்டாராம் நடிகர் கார்த்தி.
இப்படிப்பட்ட சூழலில் விஜய் படம் டிராப் செய்யப்பட்டதாகவும், தீரன் அதிகாரம் 1 படத்தின் 2ம் பாகம் இயக்க எச் வினோத் தயாராகி வருவதாகவும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இயக்குனர் எச் வினோத்துக்கும், நடிகர் கார்த்திக்கும் இடையே பனிப்புகையாக பழைய விரிசல் நீடித்து வருவதால் தீரன் அதிகாரம் படம் 2ம் பாகமாக வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவலாக கூறப்படுகிறது.





