- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்ஜே சூர்யாவின் வீடு ஷெட் போட ஆன செலவு எத்தனை கோடி தெரியுமா? தலை...

எஸ்ஜே சூர்யாவின் வீடு ஷெட் போட ஆன செலவு எத்தனை கோடி தெரியுமா? தலை சுத்திப் போன ரசிகர்கள் – கதற விட்ட படத்துக்கு இப்படி ஒரு தண்டச் செலவு செய்தாரா ஷங்கர்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். அவரது படங்கள் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும். அவரது படங்கள் பிரமாண்டமாக இருந்தாலும், அதில் சொல்லப்படும் சமுதாய கருத்துகள், விழிப்புணர்வு சார்ந்த விஷயங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ரீச் ஆகும்.

குறிப்பாக கருப்பு பணம், கல்வி வியாபாரம், காதல், லஞ்சம் ஊழல், அரசியல் பதவி ஆசை என முக்கிய விஷயங்களை தான் அவர் கதைக்களமாக எடுத்து கையாண்டு வருகிறார். முதல்வன், ஜெண்டில்மேன், சிவாஜி, எந்திரன், பாய்ஸ், ஜீன்ஸ், இந்தியன் என ஷங்கர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே, அந்த படங்களில் பிரமாண்டமாக எதிரொலித்தது. ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் கடந்த மாதத்தில் வெளியான இந்தியன் 2 படம் பார்த்த ரசிகர்கள், இது இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம்தானா என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த படம் ரசிகர்களை வெறுப்படையச் செய்திருந்தது. கமல்ஹாசன் நடித்த, ஷங்கர் இயக்கிய படம் இந்தியன் 2 என்பதே பலருக்கு சந்தேகத்தை அளித்தது.

இந்தியன் 2, இந்தியன் 3 என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கியதால் கதை, திரைக்கதை விஷயத்தில் இயக்குனர் ஷங்கர் கோட்டை விட்டு விட்டார். அதுமட்டுமின்றி எழுத்தாளர் சுஜாதா இருக்கும் வரை ஷங்கருக்கு கதை, திரைக்கதை விஷயத்தில் பக்கபலமாக இருந்து பல விஷயங்களை நுணுக்கமாக கொண்டு வந்தார். சுஜாதா இல்லாததே இந்த சொதப்பலுக்கு முக்கிய காரணம் என்றும் காரணங்கள் கூறினர்.

அத்துடன் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்ததற்கு பதிலாக, இந்தியன் படத்துக்கு இசையமைத்த ஏஆர் ரகுமானே இசை அமைத்திருந்தால் வேற லெவலில், இந்தியன் 2 இருந்திருக்கும் என்றும் விமர்சனம் எழுந்தது. கமல் வற்புறுத்தியும் இந்தியன் 2 படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க ஷங்கர் மறுத்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் எஸ்ஜே சூர்யா ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். இந்தியன் 2 படத்தில் எஸ்ஜே சூர்யாவின் பிரமாண்ட வீட்டை காட்ட ஒரு ஷெட் போடப்பட்டுள்ளது. இந்த ஷெட் அமைக்க ஆன செலவு மட்டும் ரூ. 8 கோடி ஆனது என்று எஸ்ஜே சூர்யா கூறியிருக்கிறார். இப்படி ரசிகர்களை கதற விட்டு இந்தியன் 2 படத்தில், ஒரு வீடு ஷெட் அமைக்க ஷங்கர் ரூ. 8 கோடியை தண்டமாக்கி இருக்கிறாரே, பாவம் படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்