- Advertisement -
Homeபொழுதுபோக்குமறுபடியும் செங்கல் மேட்டர் எல்லாம் பேசுவாரா? - இட்லி கடை படம் இசை வெளியீட்டு விழா...

மறுபடியும் செங்கல் மேட்டர் எல்லாம் பேசுவாரா? – இட்லி கடை படம் இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று கிண்டல் செய்யப்பட்டார். ஆனால் அந்த உருவக்கேலியை தாண்டி தனது அபாரமான நடிப்பு திறமையால் முன்னணி நடிகராக உருவானார். இப்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் பாடகர் இயக்குனர் ஸ்கிரிப்ட் ரைட்டர் என ஒரு சிறந்த கலைஞனாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என 3 படங்களை இயக்கிய நடிகர் தனுஷ் இப்போது இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்து அவரே நாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் அருண் விஜய் நித்யா மேனன் பார்த்திபன் ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வுண்டர்ஃபார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இட்லி கடை படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவித்த நிலையில், அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் அன்று வெளியானதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் சிங்கிள் என்ன சுகம் என்ற பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தலைவன் தலைவி படத்தில் நடித்த நித்யா மேனன்தான் இந்த படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்திலும் அவர் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் உள்பட படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகையர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் நடந்த குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க, என்னை பத்தி என்ன வதந்தி பரப்பினாலும் ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது என்றெல்லாம் கொஞ்சம் ஓவராக பேசியிருந்தார். அதுவே குபேரா படத்துக்கு நெகடிவ் விமர்சனமாக மாறியது. அதனால் செங்கல் மேட்டரெல்லாம் வேண்டாம் ப்ரோ, படத்தை பத்தி மட்டும் ஜாலியா பேசீட்டு போங்க என்று ரசிகர்கள் இப்போதே கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement -

சற்று முன்