பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. அவரது குடும்ப பின்னணி, இளமைக்காலம், படிப்பு, அரசியலுக்கு வந்த ஆரம்ப காலகட்டம், அரசியலில் அவர் வெற்றி பெற்றது, அவர் செய்த அரசியல் பணிகள் என அவரது வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது.
முதலில் இந்த படத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேரக்டரில் நடிக்க இருந்தது நடிகர் சரத்குமார்தான். ஆனால் ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர். சரத்குமார் வேறு ஜாதியை சேர்ந்தவர். அதனால் ராமதாஸ் கேரக்டரில் சரத்குமார் நடிப்பது செட்டாகுமா என பல தரப்பிலும் கேள்வி எழுந்தது.
எனினும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் என்ற அரசியல் பின்னணியில் அவரை பார்க்காமல், சினிமா நடிகராக ஒரு கேரக்டரில் அவரது நடிப்பு சிறப்பாகவே இருக்கும் என்பதால், சரத்குமார், டாக்டர் ராமதாஸ் கேரக்டரில் நடிக்க கமிட் செய்யபப்ட்டார். தொடர்ந்து அதுபற்றிய பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இதற்கிடையே திடீரென, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்ககை கதை படத்தில் இருந்து சரத்குமார் விலகி விட்டார். பார்லிமென்ட் தேர்தல் பணிகள், தொடர்ந்து சட்டசபை தேர்தல் பணிகளும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அந்த கதையில் நடிக்க வாய்ப்பில்லை என சரத்குமார் மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் உண்மையில், இது ஜாதி சார்ந்த ஒரு அரசியல் கட்சி தலைவர் கதை என்பதால் அவர் தவிர்த்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என நடிகர்கள் தேர்வு நடந்து வந்தது. சில நடிகர்கள், அந்த அரசியல்வாதிக்கான கேரக்டரில் பொருந்த மாட்டார்கள் என்பதால் பல நடிகர்களின் பெயர்களும் பரிசீலனையில் எடுக்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு கேரக்டரில் நடிக்க அவர்தான் சரியான நடிகர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கண்டிப்பாக அவர் நடித்தால், படமும் பெரிய அளவில் பேசப்படும். தேர்தலிலும் ஓட்டு வங்கி கணிசமாக அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த கேரக்டரில் ராமதாஸ் ஆக திரையில் தோன்ற இருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ் தான். அவரைதான் பாமக வினர் முடிவு செய்துள்ளனர். விரைவில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜிடம் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.





