- Advertisement -
பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம் மகன் கிதார் இசைக் கலைஞர் சதா என்கிற சதானந்தம் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞராக இருந்த அவர் உடல் நலம் பாதிப்பால் இன்று காலை மறைந்தார். அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா கூறுகையில், என்னுடன் உயிருடன் பழகியவர்களை என்னுடன் கலந்தவர்களை அந்த ஒரு நிலையில் நான் பார்க்க முடியாது என்பதால் காலமானவர்களை நான் நேரில் பார்ப்பது இல்லை என்று விளக்கம் தந்திருக்கிறார். இளையராஜா, சினிமா பிரபலங்கள் யாரும் இறந்தால் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதில்லை என்ற கடும் விமர்சனம் உள்ள நிலையில் இந்த விளக்கத்தை அவர் தந்துள்ளார்.





