- Advertisement -
நடிகர் தனுஷ் நடித்த ராயன் படத்துக்கு பிறகு அவர் நடித்த கேப்டன் மில்லர் குபேரா இட்லி கடை கர உள்ளிட்ட எந்த படமுமே பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக கர படம் மிக மோசமான தோல்வியை தழுவிய பிளாப் படமாக இருந்தது. இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்த ஓம் படத்துக்கு தமிழ்நாடு தியேட்டரிக்கல் விலையாக ரூ. 35 கோடி பேசப்பட்டுள்ளது. கர படம் பிளாப் ஆனதால் இந்த படத்தை அவ்வளவு விலை கொடுத்து வாங்க இதுவரை வினியோகஸ்தர் தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





