- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு வயது 82 , ஆனா இனிமேல் தான் ஆரம்பம், பஞ்ச் டயலாக் பேசிய இசைஞானி...

எனக்கு வயது 82 , ஆனா இனிமேல் தான் ஆரம்பம், பஞ்ச் டயலாக் பேசிய இசைஞானி – லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக கொண்டாடப்படுபவர் இளையராஜா. கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி என்ற படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இன்று 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் இசையமைத்தவர்.

இளையராஜாவை பொருத்த வரை இசையில், அவர் தன்னிகரற்ற ஒரு கலைஞனாக விளங்குகிறார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ரஜினி கமல் போன்றவர்கள் பெரிய ஜாம்பவான்களாக சினிமாவில் உருவாக பக்கபலமாக இருந்தது அவர்களது படங்களுக்கு, பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா தான் என்றால் அது மிகையல்ல.

ஆனால் என்னை பொருத்த வரை ரஜினி கமல் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. இசையமைக்கும்போது எனக்கு எல்லாருமே ஒன்றுதான். ராமராஜன் படங்களுக்கும் நான் இசையமைத்து இருக்கிறேன். ரஜினி கமல் படங்களை விட ராமராஜன் பாடல்கள் என்றென்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை என இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் ரஜினி கமல் முன்னிலையில் பேசியிருக்கிறார்.

இளையராஜா இசைத்துறையில் எந்தளவுக்கு வல்லவராகவோ போற்றப்படுகிறாரோ அதே அளவுக்கு தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களிலும் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார். குறிப்பாக அவர் இசையமைத்த பாடல்கள் அவருக்கு மட்டுமே சொந்தம் என்ற காப்பிரைட் விவகாரத்தில் அடிக்கடி இளையராஜா கடும் விமர்சனங்களை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ என்ற அரங்கில் ராயல் மியூசிக் ஆர்க்கெஸ்ட்ரா என்ற உலகத் தரத்தில் இசைக்கலைஞர்களை கொண்ட இசைக் கலைஞர்களை கொண்டு தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை கடந்த 8ம் தேதி நிகழ்த்தி விட்டு தற்போது சென்னை திரும்பியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இசைஞானி இளையராஜா கூறியதாவது, ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர் நான் சாதாரண மனிதன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து எனது கால்களில் தான் நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம். இனிமேல்தான் ஆரம்பிக்க போகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

சற்று முன்